
நீ மற்றவரிடம் காட்டும் அன்பு உன் பலவீனமாகப் பார்க்கப்படலாம். ஆனாலும் அன்பாக இரு. நீ அடுத்தவருக்காகச் செய்யும் உதவி அறியப்படாமல் போய்விடலாம். ஆனாலும் உதவி செய். நீ வெற்றி பெற்றால் பொய்யான நண்பர்களையும் உண்மை யான எதிரிகளையும் அடைய நேரிடலாம். ஆனாலும் வெற்றி பெறுவதில் உறுதியாக இரு. நாணயமும், யதார்த்த நடை முறையும் உன்னை மென்மையானவனாக மாற்றி விடலாம். ஆனாலும் நாணயமாகவும் யதார்த்தமாகவும் நட.
நீ இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படலாம். ஆனாலும் விடாமல் நன்மை செய். நீ கடவுளிடம் நம்பிக்கையும், மாந்தரிடம் அன்பும் பூண்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்படலாம். ஆனாலும் அவற்றைக் கைவிட்டு விடாதே. வாழ்வின் பூரணமான அர்த்தம் நல்லொழுக்கமும் நன்மதிப்பும்தான். இவற்றை நீ பின்பற்றுவதால் மதிக்கப்படாமல் போகலாம். ஆனாலும் இறுதி நாள் வரை நல்லவனாகவே இரு – தேசத்தந்தை மகாத்மாக காந்தியடிகள்.