
சிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில்‘வீட்டுச்சிறை’ வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரைப் பற்றி ஏதோ ஏடாகூடமாக பேசப்போய், மன்னர் காலிப்பின் கோபத்துக்கு ஆளானார். தண்டனை கிடைப்பது உறுதி என்று தெரிந்தவுடன் அதில் இருந்து தப்புவதற்காக பைத்தியம் போல் நடித்தார்.
மன்னரின் உத்தரவுப்படி கி.பி.1021-ம் ஆண்டு வரை சிறையில் வைக்கப்பட்டார் அல்-ஹாத்தீம். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. “சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது” என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக, மதத்துக்கு எதிராக பேசுகிறார் என்று கொந்தளித்த மதவாதிகள் கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து விட்டார்கள்.
![]() |
கலிலியோ |
நியூசிலாந்தில் இரண்டு வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைத்து விடுகிறார்கள். பல வருட சிறைவாசிகளுக்கு கூட எப்போதாவது மூன்று மாதங்கள் வீட்டுச்சிறையில் இருக்க அனுமதி பெறலாம். எலக்ட்ரானிக் கருவிகள் உதவியுடன் வீட்டில் இருக்கும் கைதி கண்காணிக்கப்படுவார். வீட்டுக்கு வரும் போன்களை பதிவு செய்வார்கள்.
![]() |
ஆங்சான் சூகி |
இந்தியாவிலும் வீட்டுச்சிறையில் ஒரு தலைவரை வைத்திருந்தார்கள். அவர் பெயர் ஷேக் அப்துல்லா. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக அவருக்கு அந்த தண்டனை தரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற்றி, தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலில் ஒரு வீட்டில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
![]() |
கொடைக்கானலில் ஷேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டிருந்த கோஹினூர் பங்களா |
சமீபத்தில் இந்திய மாணவர்கள் சிலரின் காலில் எலக்ட்ரானிக் கருவியை பொருத்தியது அமெரிக்கா. இதுவும் வீட்டுச்சிறையின் ஓர் அங்கம் தான். எங்கே செல்கிறார்கள்? யார், யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்? என்பதை கண்காணித்து தகவல் அனுப்புவது தான் இந்த கருவியின் வேலை. ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்து அவரை கண்காணித்தாலே அது சிறை தான். அது வீடாக இருந்தாலும் சரி, சிறைச்சாலையாக இருந்தாலும் சரி.