
மதுரை மாநகராட்சி வார்டு எண் 77 க்கு உட்பட்ட வசந்தநகர் ராமலிங்க நகர் 3வது குறுக்கு தெருவை சுற்றியுள்ள பகுதிகளில் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெகு நாட்களாக அந்த பகுதியில் வெறி பிடித்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. அதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் அந்த சாலைகளை பயன்படுத்தவே அஞ்சி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் பொது மக்கள் தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர்.
இருந்த போதிலும் வெறி பிடித்து சுற்றி திரியும் நாய்களை ஒழித்துக்கட்ட சுகாதார ஆய்வாளர் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த வெறி பிடித்த நாய்களை அப்பகுதியில் அயன் செய்து பிழைப்பு நடத்திவரும் சலவை தொழிலாளி வளர்த்து விடுவது குறிப்பிடத்தக்கது.