இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஆறு பிரிவுகளில் 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.7.25 கோடி. நோபல் பரிசை உருவாக்கியவர் சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல்.1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தியவர். தனது கடைசி உயில் மூலம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசு வழங்கும் அமைப்பை உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நோபல் பரிசுகள் வழங்கப் படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன. 2011ல் யார் யாருக்கு நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.
மருத்துவம்:
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டிவிடும் முக்கிய கொள்கைகள், அது பற்றிய தௌ¤வான புரிதலுக்கு வழிவகுத்த அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பியூட்லர், லக்சம்பர்கைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாஃப்மன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டெய்ன்மன் ஆகிய மூவருக்கு, இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இவர்களின் கண்டுபிடிப்பு மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் அர்த்ரைட்டிஸ் (முடக்குவாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளதாக நோபல் பரிசுக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்றுகள், புற்றுநோய் வீக்க நோய்கள் போன்றவற்றுக்கான சிகிச்சைக் களை மேம்படுத்துவதற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.
நோபல் பரிசு அறவிக்கப்படுவதற்கு முன்பே மூவரில் ஒருவரான ரால்ஃப் ஸ்டெய்ன்மன் (2011, செப்டம்பர் 30) இறந்துவிட்டார். பொதுவாக மரணத்திற்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனாலும், பரிசுக்குத் தேர்வு செய்யும் போது ஸ்டெய்ன்மன் இறந்த விவகாரம் நோபல் தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்பதால் பெயர் அறிவிக்கப்பட்டது.
இயற்பியல்:
நட்சத்திரக் கூட்டங்களின் விரிவாக்கம் அதன் மூலமான பிரபஞ்சத்தின் விரிவடைந்து வருவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சால் பெர்ல் முட்டர், அமெரிக்க ஆஸ்திரேலியரான பிரெய்ன் ஷ்மிட் மற்றும் அமெரிக்கரான ஆடம்ஸ் ரீஸ் ஆகிய மூவருக்கு, இந்தாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
 |
சால் பெர்ல் முட்டர் |
 |
ஆடம்ஸ் ரீஸ் |
 |
பிரெய்ன் ஷ்மிட் |
கடந்த 1990ல் பிரபஞ்சம் குறித்த ஆய்வு குழு ஒன்றில், சால் பெர்ல் முட்டர் மற்றும் பிரெய்ன் ஷ்மிட்டும் மற்றொரு குழுவில் ஆடம்ஸ் ரீசும் பணியாற்றினர். இந்த ஆய்வில் மிக தொலைவிலுள்ள 50 சூப்பர் நோவாக்கள் எதிர்பார்த்ததைவிட வலுவற்ற அளவிலேயே ஒளியை உமிழ்வதை அவர்கள் கண்டறிந்தனர். இதனால் பிரபஞ்சம் அதிக வேகத்துடன் விரிவடைவதாக முடிவுக்கு வந்துள்ளனர். இதன் வேகம் அதிகரித்தால் பிரபஞ்சம் பனிப்பாறையாக மாறிவிடும் என்பதை மூவரும் கண்டு பிடித்தனர். இதற்காக, இவர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
வேதியியல்:
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி டேனியல் ஷெட்மேன் குவாசிகிரிஸ்டல்களை கண்டுபிடித்த தற்காக 2011ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு முதன் முறையாக குவாசிகிரிஸ்டல்கள் குறித்த ஆய்வை வெளியிட்டார். இதன் மூலம் படிகங்களுக்குள் அணுக்களை திரும்ப செலுத்த முடியாது என்பதே இவரின் ஆய்வு முடிவு.
 |
|
இதற்கு விஞ்ஞானிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இதன் பிறகு குவாசிகிரிஸ்டல்கள் குறித்த ஆய்வு அதிகமாக நடந்தது. இதன் பிறகு, டேனியல் ஷெட்மேனின் கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்காக தற்போது வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கியம்:
சுவீடன் நாட்டின் மனோதத்துவ நிபுணரும், கவிஞருமான டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமருக்கு, 2011ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மனித மனத்தின் அற்புதங்கள் குறித்து இவர் அளித்துள்ள இலக்கியப் படைப்புக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இவர் எழுதிய, ‘மிஸ்டிக்கல் வெர்சடைல் அண்ட் சேட்’ என்ற கவிதைத் தொகுப்பு, 50 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 90ஆம் ஆண்டு, பக்கவாதம் ஏற்பட்டதால் இவரால் சரிவரப் பேச முடியாமல் போனது. இதனால், தனக்குக் கிடைத்த நோபல் பரிசு குறித்து கருத்து கூற டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமரால் முடியவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறும் 8ஆவது ஐரோப்பியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி:
எலன்ஜான்சன் எர்லீப், தமாக்குள் கர்மான், லேமா ஆகிய மூன்று பேருக்கு 2011ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பெண் உரிமை மற்றும் அமைதிக்காக போராடிய தால் இவர்கள் மூவரும் தேர்வு செய்யப்பட்டதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. 72 வயதான எலன்ஜான்சன் லைபீரிய அதிபராக உள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் இவர். லைபீரியாவின் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்படுபவர்.

லேமாவும் நைபீரிய நாட்டைச் சேர்ந்தவர். இவர், 2003ல் நைபீரியாவில் நடைபெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர். லைபீரிய பெண்களைத் திரட்டி அமைதி இயக்கம் ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் பெண்ணுரிமைக்காக அறவழியில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்தி கொடுத்ததில் இவரின் பங்கு அளப்பரியது.
ஏமனைச் சேர்ந்த தமாக்குள் பெண்களின் உரிமைக்காக போராடி வருகிறார். அந்நாட்டில் நடந்த பல்வேறு மனித உரிமை போராட்டம் மற்றும் அதிபருக்கு எதிரான புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். பெண்கள் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
பொருளாதாரம்:
பெரும் பொருளாதார வளர்ச்சியில், பணவீக்கத்தால் ஏற்படும் பகுப்பாய்வு செய்யும் வழிமுறைகளை வழங்கியதற்காக, அமெரிக்க ஆய்வாளர்களான தாமஸ் சார்ஜன்ட் மற்றும் கிரிஸ்டோபர் சிம்சுக்கு இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச் சியில் கடன்களின் மீதான வட்டி உயர்வு அல்லது குறைப்பு பணவீக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று இவர்கள் உருவாக்கிய வழிமுறை, இன்றளவும் பெரும் பொருளாதார பகுப்பாய்விற்கான முக்கிய கருவிகளாக உள்ளது என்று நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தாமஸ் சார்ஜன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், சிம்ஸ் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.