Header Banner Advertisement

2016 ஆண்டு பலன்: ரிஷபம்


p108

print

ரிஷபம்:

எந்தச் செயலையும் கலை அழகு மிலிரச் செய்து அனைவரிடமும் பாராட்டு பெறும் ரிஷப ராசி அன்பர்களே!

கிரகநிலை:

குருபகவான் சுகஸ்தானத்திலும் ராகு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சனி பகவான் ஸப்தம ஸ்தானத்திலும் கேது லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ரண ருண ரோக  ஸ்தானம் –  தொழில்  ஸ்தானம் –  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அயன சயன போக  ஸ்தானம் –  சுக ஸ்தானம் –  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  பாக்கிய  ஸ்தானம் –  சப்தம பார்வையால்  லாப ஸ்தானம் –  நவம பார்வையால்  ராசி –   ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.  சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பண வரத்து திருப்தி தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இந்த ஆண்டில் நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் புகழ் தேடி வரும். புகழுக்கான ஆசையில் வீண் செலவுகள் உருவாகும். வாய்ப்பு உள்ளதால பணத்தை மிக கவனமாக கையாள வேண்டும். உங்களது இயற்கையான மனதைரியத்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வீடு, வாகனம், பால்பாக்கியம், இதர கால்நடை இனங்களில் அனுகூலமான நிலை உருவாகும். புத்திர வகையில் செலவினங்கள் உண்டாகும். தொழில் வகையிலும் உறவினர்கள், நண்பர்கள் வகையிலும் ஏற்பட்ட பகை நீங்கி அனுகூலம் உண்டாகும். மனைவியின் அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும் நல்ல நேரம் வந்திருக்கிறது. உடல் ஆரோக்கியம் பெறவும், ஆயுள் விருத்தி அடையவும் கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உதவிகேட்டு உங்களிடம் வருவர். தகுதிக்கு உட்பட்டு உதவி புரிந்தால் துன்பம் இல்லை. இயந்திரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் அபிவிருத்தி பெறுவர். ஆதாயமும் விரயமும் அடுத்தடுத்து வரும். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு,

புதிய உற்சாகத்துடன் அரசுப்பணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களிடம் கடுமையான கண்டிப்பு காட்டினால் நிர்வாக உயர்வுக்கு வசதியாக இருக்கும். இந்நேரத்தில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். தொழில் சார்ந்த வார்த்தைகள் மட்டுமேயன்ரி, ஊழியர்களின் சொந்த பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதை தவிர்க்க வேண்டும். தைரியமான சிந்தனை மனதில் உருவாகும். உங்கள் செயல்பாடுகளால் வருமானம் அதிகரிக்கும். நிர்வாகத்தின் சார்பில் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்ரு வரும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெண் ஊழியர்களுக்கு சற்று கூடுதலான செலவாகும். உணவு பழக்க வழக்கங்களில் வரைமுறை தேவை. இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். நடைபயிற்சி, யோகாசனம் ஆகியவை உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

தொழிலதிபர்களுக்கு,

ஆட்டொமொபைல் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் உற்பத்தி செய்பவர்களும் தங்கள் தொழிலில்  முன்னேற்றம் காண்பர். பால் தொடர்பான பொருட்கள் செய்வோர் நல்ல லாபம் அடைவார்கள். அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்வோர் உயர்வு பெறுவர்.  ரெடிமேட் தொழிலில் உள்ளவர்கள், கவரிங் நகை தயாரிப்பாளர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் புதுமைகளைச் செய்து மிகுந்த வரவேற்பு பெறுவார்கள். உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோர் தங்கள் அணுகுமுறையை சற்று மாற்றி தேவைக்கேற்ப கொள்முதல் செய்து விற்பனை செய்வது நலம் தரும். பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கல் தங்களின் தொழில் திறமையால் மலிவான விலைக்கு பொருட்களை கொடுத்து நல்ல லாபம் ஈட்டுவார்கள். ஆண்டுமுழுவதும் மனம் உற்சாகமாக இருக்கும். கடுமையாக பேசும் வார்த்தைகளால் சில சிரமங்கள் உண்டாகலாம். தைரியமான எண்ணங்கள் மனதில் உருவாகி நல்வழிப்படுத்தும். நண்பர்களால் புதிய படிப்பினை கிட்டும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் எதிரிகளால் வரும் இடையூறுகள் திசைமாரி சென்றுவிடும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபச்செலவுகள் அதிகம் என்றாலும் மன நிறைவுக்கு குறைவில்லை.

மாணவர்களுக்கு,

படிப்பில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும். நண்பர்களுடன் வீண் வார்த்தைகள் பேசுவதால் வார்த்தைகள் கடினமாகி மனக்கசப்பு ஏற்படும் சூழ்நிலை வரலாம். தைரியமான சிந்தனைகளும், அதனை செயல்படுத்தும் வாய்ப்புகலும் உருவாகும். இயற்கையிலேயே படிப்பில் ஆர்வமுள்ள உங்களுக்கு சில கிரகச் சூழ்நிலைகளால் கல்வித்தடை ஏற்படலாம் என்பதால், காலையில் எழுந்து கடவுள் வணக்கம் செய்து படிப்பைத் துவங்கினால் கூடுதல் மதிப்பெண் பெறுவது எளிதாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன், அவர்களால் உதவியும் நிறையவே கிடைக்கும். மருத்துவம் சார்ந்த கல்வி பயில்வோர் நுட்பமான அறிவுடன் செயல்பட்டு நற்பெயர் பெறுவார்கள். பெற்றோரின் அன்பான கவனிப்பால் உங்களது நியாயமான தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான சில தீய நட்புகள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே குரு வழிபாடு செது அதிலிருந்து விலகுவதற்கான வழிவகைகளை செய்துவிடுங்கள். படித்துகொண்டே பணம் சம்பாதிக்கும் வேலை ஒன்றை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

பெண்களுக்கு,

மிகவும் நிதானத்துடன் குடும்பத்தை நிர்வகிக்கும் புதிய சூழ்நிலை உருவாகும். இதுவரை குடும்பம் முன்னேர பல்வேறு வகையில் உதவி செய்த உங்களுக்கு, அதனால ஏற்படும் பலன்களும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல கண்கூடாக தெரியவரும். கைத்தொழில் மூலம் வருவாய் ஈட்டும் பெண்களின் வேலை வாய்ப்பில் சிறிது சுணக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களது உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து நடவடிக்கைகளுக்கு ஆட்படலாம். எனவே கவனமுடன் செயல்படுங்கள். ஆன்மீக வழிபாடும் பிறருக்கு உதவிகள் புரிவதன் மூலமும் மனமகிழ்ச்சி உண்டாகும். தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகள் உங்கள் மீது பாசம் செலுத்துவார்கள். உடல்நலமும் ஆயுள் பலமும் ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உருவாகும். திருத்தல சுற்றுலா செல்வீர்கள்.

கலைஞர்களுக்கு,

தங்கநகை உற்பத்தி கலைஞர்கள் மேன்மை அடைவார்கள். திரைக்கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஓவியக்கலைஞர்கள் தங்கள் தொழில்திறமையால் நற்பெயர் பெறுவார்கள். கட்டடக் கலைஞர்கள் வேலையில் சற்று சுணக்கம் ஏற்படும். தைரிய சிந்தனை, புகழ் அபிவிருத்தி ஆகும். பகை நீங்கும். நண்பர்கள் உதவி செய்வர். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக சிந்தனைகள் மனதை நல்வழிப்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு,

உயர்பதவியில் உள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொண்டு காரியத்தை முடித்துக்கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். இதன் காரணமாக சக தொண்டர்களுடன் தகராறு உருவாகி வழக்குகளில் சிக்கலாம். எனவே நிதானத்துடன் செயல்பட்டு சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாரிசு அரசியல் அவப்பெயரை உருவாக்கலாம். அரசியலுடன் தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் சற்று சிரமப்படுவார்கள். அடிதடி, கட்டைப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களை தவிர்ப்பது நலம். உடல்நலமும், பொருளாதார வளமும் அனுகூலமாக இருக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்

அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருப்பதி