Header Banner Advertisement

2016 ஆண்டு பலன் : விருச்சிகம்


fdf

print

விருச்சிகம்:

நிதானத்தைக் கடைபிடித்து லட்சிய மனதுடன் செய்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறும் விருச்சிகராசி  அன்பர்களே!

கிரகநிலை:

குருபகவான் தொழில் ஸ்தானத்திலும் ராகு லாப ஸ்தானத்திலும் சனி பகவான் ராசியிலும் கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அயன சயன போக  ஸ்தானம் –  சுக ஸ்தானம் –  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ரண ருண ரோக  ஸ்தானம் –  தொழில்  ஸ்தானம் –  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் லாப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் –  சப்தம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் –  நவம பார்வையால்  ஸப்தம  ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும்.  எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

இதுவரை எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. இந்த 2016ம் ஆண்டில் நிலை மாறப் போகிறது. நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக்  காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பார்வை உங்கள் மீது படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட  உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். உங்களை உதாசீனம் செய்த உற்றார், உறவினர்கள்  உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல புராதன ஆலயங்களுக்கு சென்று  வழிபாடு  செய்வீர்கள்.  புதிய உறவு முறைகள் ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நிறையும். கர்வத்தினால் எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வம்பு  வழக்குகளில் விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்ளவும்.  உங்கள் செய்தொழிலை விரிவு படுத்த எந்தக் குறுக்கு வழியையும் நாட வேண்டாம்.

சிறிய கௌரவப் பிரச்னைக்காக நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப்  பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள்.  வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து  நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில்

குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு,

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.  எனவே  பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு  தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள்.

தொழிலதிபர்களுக்கு,

வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்  தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை  வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ  பொருட்களை விற்பனை செய்யவும்.

பெண்மணிகளுக்கு,

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை  அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமான இருக்க மாட்டார்கள. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில்  மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள். அதனால் பதவி உயர்வு வந்து சேரும். தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் நிறைவான பணம் கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையிலான செயல்களை செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவனின் ஆயுள் பலம் அதிரிக்கும். மன அமைதியையும்  செய்வ அனுகூலத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கு நீங்கள் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து உதவுவீர்கள்.

மாணவர்களுக்கு,

மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.  கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில்  வெற்றி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு,

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே  கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். உங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு,

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி

அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்