
தான் எப்படிபட்டவராக இருந்தாலும்…நல்லவராகவோ.. பொல்லாதவராகவோகூட இருந்தாலும்
விரும்புவது மட்டும் நல்ல உறவுகளையும்..அருமையான, எந்த குறையும் இல்லாத தனக்கு எல்லா வகையிலும் பிடித்த மாதிரியான நட்பையோ தான்…
ஒவ்வொருவருமே சுயநலமாகதான் சிந்திக்கின்றோம்…. தன்னிடம் உள்ள குறை நிறைகளை…கண்டுகொள்வதே இல்லை…
தான் எப்படியெல்லாம் உறவுகள், நட்புகள் வேண்டும் என்று ஆசைபடுகின்றோமோ.. அப்படியெல்லாம் முதலில் நாம் இருக்கின்றோமா என்று ஆராய்ந்து ஆசைபடுபவர்கள் மிக சிலர்
நம்மைபோலவேதானே..மற்றவர்களும் ஆசைபடுவார்கள்… அவர்களும் பொருத்தமானவர்களைதானே தேர்வு செய்வார்கள் என்று துளிகூட யோசிக்காமல்…
தம்மை நிராகரித்தவரை வெறுப்பது..துற்றுவது..இல்லாத இடைஞ்சல்களை செய்வது என்று மேலும் மேலும் பாவங்களையும்.. விரும்பதகாத செயல்களையும் செய்து..
எளிதாக எல்லோரது வெறுப்பையும் சம்பாதித்து..பிறகு குத்துதே குடையுதே என்று புலம்பி மனஉளைச்சலுக்கு ஆட்பட்டு விடுகின்றோம்…
நம்முடைய நல்ல எண்ணங்களும்..நல்ல செயல்களுமே கடின உழைப்புமே நம்மை உயர்த்த வல்லவை..நல்ல உறவுகளையும்.. நட்பையும் குறையில்லாமல் கொடுக்கவல்லவை…
வேறு எந்த வகையான குறுக்கு யுத்திகளும் வெற்றிபோல் தெரிந்தாலும் முடிவில் நிலையான தோல்வியையும்,,, மனஉளைச்சலையும் தந்து..வாழ்வின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடுகிறது…. இது அனுபவ உண்மைதான்
நமது நல்ல செயல்களும்..நடவடிக்கைகளுமே பிறரை தம்பால் ஈர்க்கவல்லவை… குறுக்கு வழிகள் டெம்ப்ரவரிதான்
அதிகாரத்தாலோ.. பொய்களாலோ தவறான வழிகளிலோ நிலையான உறவுகளையோ .. சந்தோஷங்களையோ சம்பாதிக்கமுடியாது என்பதை எப்பொழுதிலிருந்து உணர்ந்து செயல்படுகின்றோமே…
அன்றிலிருந்தே நிம்மதியும் அமைதியும்..வெற்றியும் நமக்கே நமக்காய் சொந்தமாகிவிடும்…