Header Banner Advertisement

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்


002

print
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ராபர்ட் ஸ்வான் என்ற ஆராய்ச்சியாளர். இவர் துருவப் பகுதியை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரை ‘ஐஸ் மேன்’ என்று சூழலியல் வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.
ராபர்ட் ஸ்வான்
இவர் வாழ்வின் பெரும்பகுதியான நாளை மைனஸ் 73 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே கழித்திருக்கிறார். அந்த கடுமையான குளிர் கண்களில் உள்ள கண்ணீரைக் கூட பனிக்கட்டியாக மாற்றிவிடும் தன்மைக் கொண்டது. அதனால் கண்களால் எதையும் பார்க்கமுடியாது. பற்களில் கூட பிளவுகள் ஏற்பட்டுவிடும் என்று கூறுகிறார்.

விஞ்ஞானிகள் கூறுவதை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இரண்டு மீட்டர் கடல் மட்டம் உயர்ந்தால் கூட உலகில் உள்ள பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். இது குறித்து நிறைய பிரச்சாரம் செய்து வருகிறார் ராபர்ட்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

மேலும் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தான் இதற்கான முக்கிய காரணம். துருவ பகுதியில் இவர் நடந்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது, கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்க ஆரம்பித்தன அதற்கு காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை. அதன் வழியாக ஊடுருவிய சூரியக் கதிர்கள் தான் இந்த பாதிப்புக்கு காரணம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் தங்கியிருந்து, சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அப்போது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளது ஸ்வானின் ஆய்வுக்குழு.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே பெரும் காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.

சிந்திக்கவேண்டிய விடயம்!