
வெயில் அதிகம் என்பதால், பலருக்கும் முகத்தில் பருக்கள் வந்து, அசிங்கமாக கருமையான புள்ளிகளாக இருக்கும். இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க ஏராளமான வழிகள் உள்ளது. அதில் மிகவும் சிறப்பான ஓர் வழி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கலாம். சரி, இப்போது மூன்றே நாட்களில் கரும்புள்ளிகளை மறைய செய்யும் அந்த வழி என்னவென்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1
மாதுளை விதைகள் – 1/2 பௌல்
எலுமிச்சை – 1/2
ஐஸ் ட்ரே – 1
செய்முறை #1
முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் தோலை சீவி அகற்ற வேண்டும். பின் அதை துருவிக் கொள்ளவும்.
செய்முறை #2
பின் மிக்ஸியில் உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #3
பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலக்கவும்.
செய்முறை #4
அடுத்து ஐஸ் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.
செய்முறை #5
பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்கு 1-2 ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்.