Header Banner Advertisement

பரந்துபட்ட சிறகுகளைக் கொண்டு…


With a broad winged

print

விசித்திர உலகத்தில்
விடைதேடும் பறவைகளாய்
வீரிய சிறகுகளை விரித்து
விண்ணுடைத்து அண்டம் துளைத்து அதற்கப்பாலும்
வில்லின் அம்பெனவே
விரைந்தேகி
பறக்கையில்
காணப்போவது கவின்மிகு
காட்சிகளா அன்றி
கடைத்தேற வழியின்றி சிக்கி
சிதறுண்டு இழிநிலை பிறவியென
இகழ்ந்து நகைத்துரைக்கும் கோட்பாடா?
விதியின் கால்களிடை பந்தெனவே
உதைபட்டு அலைக்கழிந்து
உச்சத்திலோ பள்ளத்திலோ….
மயனுலகாய் விரிந்த எழிலுலகம் ஒருபுறம்
மரித்த நிலங்களின் மணல்மேடாய் உயிரிழந்த கோரமுகம் மறுபுறம்..
சிறுதுகளைப் பிளந்தெடுத்து அணுத்துகளாய் அண்டசராசரத்தில் அத்தனையும்
பிரித்தெடுத்து ஆள நினைத்தாலும்
அடுத்து வருவதை அறியாமல்
அழிக்கவொரு வித்தையென
அரை நொடியில் மனித புத்தியினை
வீழ்த்திவிடும் இயற்கையதின்
மனமறிந்து இயைந்தாலே இனித்திடும் வாழ்வுமது..
வெல்ல நினைத்தாலோ வித்தகம்
புரிந்தாலோ
விரலசைவில் வீழ்ந்து விடும்
கோட்டையது….

COURTESY & SOURCE : – மதுரா –