Header Banner Advertisement

விரைய ஸ்தானம் எனும் 12ம் வீடு குறித்த விளக்கம் !


Dividends 12 houses Description position

print

ஒருவரது பிறந்த ஜாதகத்தை வைத்து பலன்கள் ஆராய்கின்ற போது பன்னிரெண்டாம் இடம் எனப்படுகின்ற லக்னத்திற்கு அடுத்து தொடர்ந்து வருகின்ற பன்னிரெண்டாம் வீட்டின் தன்மைகள் பற்றி பார்ப்போம்

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அநாவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். பொருளின் நாசம், செலவு, அங்க குறைவு, படுக்குமிடம் இவற்றைப் பற்றிய விசயங்களை எடுத்து விளக்குவது சயன ஸ்தானம் அல்லது விரைய ஸ்தானம் என்றழைக்கப்படும் பன்னிரெண்டாம் பாவம் ஆகும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.

மனித உடலில் லக்னம் என்பது தலைப் பகுதியைப் பற்றி குறிப்பிடும் ஸ்தானம் ஆகும். அதைப் போன்று அதனை அடுத்து வருகின்ற ஸ்தானங்களில் பன்னிரெண்டாம் இடம் மனிதனின் பாதம் பகுதியை குறிக்கும் ஸ்தானம் ஆகும்.

மனித வாழ்வில் வரவுகள் இருந்தால் செலவுகளும் இருக்கத்தான் செய்யும் அதே சமயம் மனிதன் செய்கின்ற செலவுகள் நல் வழிச்செலவுகளாக வருகின்றதா அல்லது தீய வழிகளில் செலவுகள் வருகின்றதா என்பதை உரைப்பதும் உடலில் பாதம் பகுதியை குறிப்பதால் பாதங்களில் ஏற்படும் நோய்களையும் வெளி நாடு, வெளியூர் செல்லும் நிலையையும் சயனம் எனப்படுகின்ற படுக்கை மற்றும் . உறக்கம் எப்படி இருக்கும் என்பதையும் தெளிவாக உணர்த்தும் ஸ்தானம் பன்னிரெண்டாம் பாவகம் ஆகும்

விரைய, செலவு ஸ்தானம், சயன ஸ்தானம், பாத ஸ்தானம் எனப்படுகின்ற பன்னிரெண்டாம் பாவகத்தின் ஸ்தான- சம்பந்தப் பட்ட பாவக தொடர்புகள் தன்மைகள்    ,பாதங்கள், காலணிகள், வீட்டின் தரை, நிலம் , பூமித் தொழில் இலாப நஷ்டம் , கட்டில், மேசை, நாற்காலி, சுரங்கத்தொழில்,செங்கல் காலவாய் , பூமியின் அடியில் விளையும் பொருள்கள், தரையில் உறங்குதல்,கட்டில் படுக்கை , ஊர், ஊராக சுற்றி திரிதல்,அதிகமாக நடந்து செல்லுதல், காலில் அணியும் அணிகலன்கள்,மெட்டி போடுதல்,கால் நகங்களை அழகு படுத்துதல், காலில் ஆணி ஏற்படுதல், பாதங்களில் ஏற்படும் சேற்றுப்புன், தப்பி ஓடுதல், கிழே விழுதல் ,கால் மசாஜ் செய்தல் , கால்கள் துண்டிக்கப் படுதல் , கால்கள் மூடி உடை அணிதல்,வெளி நாட்டில் வசித்தல் ,வெளியூர் சம்பந்தப் பட்ட தொழில் ,வாகனங்கள் ஓட்டுதல் ,ஓட்ட பந்தயம், கால் நடைகள் வளர்த்தல் , அதிகம் உறங்குதல் ,குறைவான தூக்கம், சாலைகளில் படுத்து உறங்குதல், தனக்கு மட்டும் செலவு செய்தல்,கருமித்தனம், ஊதாரி, ஊர் சுற்றி திரிதல்,கல்விக்கு செலவு செய்தல்,குடும்பத்திற்கு செலவு செய்தல், சகோதர்களுக்கு உதவுதல் ,வீடு, வாகனம் சம்பந்தப் பட்ட செலவுகள், குழைந்தைகளுக்கு, அனாதை இல்லங்களுக்கு செலவு செய்தல், தீய பழக்க வழக்கங்களுக்கு செலவிடுதல்,கோர்ட்டு வழக்கு என்று செலவிடுதல்,நோய்களுக்கு செலவிடுதல் , கணவன், அல்லது மனைவிக்கு செலவு செய்தல் ,அறுவைசிகிச்சைக்கு செலவு செய்தல் ,தந்தைக்கு, தந்தை வழி உறவினர்களுக்கு செலவு செய்தல் ,தொழிலில் அதிக முதலீடுகள் செய்தல் ,மூத்த சகோதர, சகோதரிகளுக்கு செலவு செய்தல்,உல்லாச சல்லாபத்திற்கு செலவிடுதல் ,சுற்றுலா மூலம் செலவு செய்தல் ,தாயாருக்கும், தாய் வழி உறவினர்களுக்கு செலவு செய்தல் ,அடுத்தவர் குடும்பத்திற்கு செலவு செய்தல் ,தர்ம காரியங்கள், அன்னதானம், சத்திரங்கள் அமைத்தல், சூதாட்டம் இவற்றின் மூலம் செலவுகள் செய்தல் ,இப்படி பற்பல தன்மைகளை உடையதாகும்.,

பனிரெண்டுக்குடையவன் இருக்கும் பலன்

12குடையவன் தனது உச்ச வீட்டிலோ தனது நட்பு வீட்டிலோ சுபர் வீட்டிலோ சுபனின் வர்க்கத்திலோ இருந்தால் ஜாதகனுக்கு நல்ல லோக பிரப்தியை உபதேசிக்கின்றனர் .,இதற்கு மாறுப்பட்டு பகை -நீசம் அசுபனின் வர்க்கம் பெற நரகலோக ப்ராப்தியை சொல்லுகின்றனர் அதேபோல் பனிரெண்டுக்குடையவன் எந்த பாவத்திலிருக்கின்றானோ அந்த பாவத்துக்கு தகுதியான பொருளுக்கு நாசத்தை உபதேசிக்க வேண்டும் .,

பனிரெண்டாம் இடமாக அமையும் ராசிகளின் பலன்

மேஷம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் அதிகச் செலவினாலும், சரீர நல குறைவினாலும் பாதிக்கப் படுவான். அதிகமாக தூங்குபவனாகவும் ஆவான்.

ரிஷபம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் உயர்ந்த ஜாதிக் காளைகளினால் பொருளின் வரவும், பெண்களின் மூலம் பொருளின் லாபமும் ஏற்படும். நல்ல அறிவாற்றலினால் சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஈடுபாடும். ஏற்படும். பண்டிதர்களுடன் அறிவு பூர்வமான சர்ச்சை நடத்த எப்போதுமே தயாராக இருப்பார்.

மிதுனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் பெண்களினால் அதிகமான பொருளை இழப்பர். கெட்ட பழக்கம், கெட்ட நடத்தை உடையவர். தகாத முறையில் பொருளை செலவழிப்பர்.
கடகம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் அந்தணர்கள், பெரியோர்கள், நற்காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவன். மேலும் பெரியோர்களின் புகழ் பாடுவான்.

சிம்மம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் அதிகமான விரோதிகளால் தாக்கப்படுவர். உடல் நிலை பாதிப்பினால் பீடையை அடைவார். கெட்ட காரியத்திலும் திருட்டுத் தொழிலும் ஈடுபாடு உடையவர்.

கன்னி பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு உள்ளவன். சுப காரியத்தில் ஈடுபடுதலும், அழகுப் பொருள்களின் மூலமும், நல்லவர்களின் சேர்கை மூலமும் பொருளை இழப்பான்
.
துலாம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் பெரியோர்களிடமும் நல்லவர்களிடமும் ஈடுபாடு உள்ளவன். சாஸ்திரத்தை காப்பாற்றுவான். புலனடகத்திலும் அதிகமான யாத்திரையிலும் ஈடுபடுவான்.

விருச்சிகம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகனுக்கு கவன குறைவினாலும் ஆடம்பர செலவினாலும் நஷ்டம் ஏற்படும். எதிரிகளின் எதிர்ப்புக்கு ஆளாவான்.

தனுசு பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகனுக்கு கேட்டவர்களாலும் ஏமாற்றுபவர்களாலும் செலவுன்டாகும். நன்றி மறப்பவர் மூலமும் பிறரை ஏமாற்றுவதன் மூலமும் பொருளை இழப்பர்,

மகரம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகர் அதிகமாக சாப்பிடுவார். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்பு கிட்டும். விரதம், உபவாசம் தான தர்மம் இவனது இலட்சியங்கள்.
கும்பம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் வனம் சென்று கடுமையான தவம் செய்யும் பேறு பெறுகின்றான். பெரியோர்களை உபசரித்து விருந்தோம்புதலில் அதிகமான பொருளை செலவளிப்பான்.

மீனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் கடல் கடந்து பிரயாணம் செய்வான். தரக்குறைவான சேர்க்கையினால் பாதிக்கப் படுவான்.அதிகமான பொருளையும் இழப்பான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.
பன்னிரெண்டுக்கு உடையவன் மேஷத்தில் இருந்தால் அதிகச் செலவும் உடல் நலப்பாதிப்பும் இருக்கும். தூக்கத்தில் பிரியமுள்ளவன். சுபன் இருந்தால் ஜாதகன் லாபம் பெற்றவன் ஆவான்.
பன்னிரெண்டுக்கு உடையவன் ரிஷபத்தில் இருந்தால் சிறந்த காளைகளினால் லாபமும், சிறந்த பெண்களால் லாபமும் உண்டு. சாஸ்திர சம்பதமான செய்திகளை பற்றி விவாதம் செய்வார். இதனால் வித்வான்களுடன் தொடர்பு வரும்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மிதுனத்தில் இருந்தால் பெண்களின் மீது ஆசை வைத்து அதனால் அதிகமான பணவிரயம் செய்வார். பேய் பிசாசு முதலியவற்றின் மூலமாகவோ, கெட்ட குணத்தின் மூலமாகவோ செலவழிக்க கூடியவனாகின்றான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் கடகத்தில் இருந்தால் பிராமணர்கள், தேவர்கள் ஆகியோர் வகையில் யாகம் முதலிய தர்ம காரியங்களை செய்வதாலும் செலவு ஏற்படும். நல்லவர்கள் இவரைப் பாராட்டிப் புகழ்வார்கள்.

பன்னிரெண்டுக்கு உடையவன் சிம்மத்தில் இருந்தால் அதிகமாக விரோதங்கள் வியாதியினால் உடல் நலம் பாதிப்பு, கெட்ட காரியத்தில் ஈடுபாடு இருக்கும். கல்வியால் செலவு ஏற்படும். திருடனாக மாறுவதும் உண்டு.

பன்னிரெண்டுக்கு உடையவன் கண்ணியில் இருந்தால் பெண்களோடு விசித்திரமான விளையாட்டுகளை விளையாடுபவன். கல்யாணம் முதலிய மங்களகரமான காரியத்தின் மூலமும், சோபையை தருகின்ற பொருளின் வழியிலும், சாதுகளின் வழியிலும் செலவு செய்பவனாயிருப்பன்.

பன்னிரெண்டுக்கு உடையவன் துலாத்தில் இருந்தால் பிராமணர்கள், தேவர்களுக்கு உறவினன் ஆவான். வேத சாஸ்திரப்படி விரதங்கள் திருப்பணிகள் நடக்க செலவு செய்வான். இந்திரியங்களை அடக்கி புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்து மிக்க புகழ் பெற்றவனாக விளங்குவான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் விருசிகத்தில் இருந்தால் கவனகுறையுள்ளவன், பிறரை அணுகுவான். ஆடம்பரத்திற்காக செலவு செய்பவன்,.தீய நண்பர்களின் உதவியால் நன்மை செய்தவர்களையே அதிகமாக நிந்திப்பான். ஏசுவான். திருடர்கள் சம்மந்த பட்ட தொழிலை மேற்கொண்டு பொருளை செலவளிப்பான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் தனுசு இருந்தால் பலவிதமான வஞ்சனைகளாலும், கெட்டவரோடு சேர்வதாலும் செலவழிப்பன். செய்நன்றி மறந்தவன். பிறரை ஏமாறுபவன்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மகரத்தில் இருந்தால் குடி சாப்பாடு வகை செலவு செய்வான். தன் உறவினர்களை மதித்து வணங்காதவன். மிடமாக உண்பான். பிறரால் நிந்திக்கப் பட்டவன். பயிர் தொழில் அற்றவனாவான்.

பன்னிரெண்டுக்கு உடையவன் கும்பத்தில் இருந்தால் தேவர்கள், சித்த புருஷர்கள், பிராமணர்கள், தவம் செய்பவர்கள், தோத்திரம் செய்பவர்கள் இவர்களுக்காக செலவு செய்பவன். நல்லோர்களின் வழி நடப்பவன். சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்ட புண்ய கர்மங்களின் மூலமும் ஜாதகனுக்கு அதிக செலவுகள் உண்டாகும்.

பன்னிரெண்டுக்கு உடையவன் மீனமாக இருந்தால் கப்பல் யாத்திரையிலும் கெட்டவர்களின் நட்பாலும் விவகாரத்தாலும் செலவு உண்டாகும்.
ஜாதகன் சம்பாதித்து வைத்த சொத்து 12 ம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறாரோ அவர்களுக்கு போய் சேர்ந்து விடும் .,இது பொது பலன்

உதாரணம் >

12 ம் அதிபன் 3 ல் நின்றால் அவனுடைய வீடு சகோதரனுக்கு .,
12 ம் அதிபன் 4 ல் நின்றால் அவனுடைய தாய்க்கு ,
12 ம் அதிபன் 7 ல் நின்றால் அவனுடைய மனைவிக்கு ,
12 ம் அதிபன் 9 ல் நின்றால் அவனுடைய தந்தைக்கு .,

ஆயுள் முடிந்த பின் அடையும் இடங்கள் :-
இதை ஆராயும் போது கிரக சேர்க்கையை மட்டுமே எடுத்து
கொள்ள வேண்டும் .,

ஆனால் இந்த வித பலனில் கிரக சேர்க்கை பலன் கொடுக்க படவில்லை .,
ஆகையால் ஜோதிட விதிகளின் படி சேர்ந்த கிரகங்களின் வலிமையை கொண்டு தீர்மானம் செய்ய வேண்டும் என்று ஆகிறது
12 ம் ஸ்தானாதிபதியுடன் ,சூரியன், சந்திரன்
சேர்ந்திருந்தால் “சிவலோக” பதவி அடைவான் .,
12 ம் ஸ்தானாதிபதியுடன், செவ்வாய், கேது
சேர்ந்திருந்தால் “வீர சுவர்க்கம்” அடைவான்
12 ம் ஸ்தானாதிபதியுடன் ,புதன் சேர்ந்திருந்தால்
” வைகுண்ட ” பதவி அடைவான் .
12 ம் ஸ்தானாதிபதியுடன், வியாழன் சேர்ந்திருந்தால்
“தேவலோக பதவி ” அடைவான்.,
12 ம் ஸ்தானாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால்
“இந்திர பதவி ” அடைவான் .,
12 ம் ஸ்தானாதிபதியுடன் சனி ,ராகு சேர்ந்திருந்தால்
” இயம லோகம் ” “எமலோக பதவி ” அடைவான் என
கண்டு கொள்ளவும் .,