Header Banner Advertisement

யோகங்கள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஓரு விதம் !


Eachdifferent way Yogas

print

சுக்கிர முடம்: சூரியனுக்கு முன்னும் பின்னும் 9 டிகிரியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது அது அஸ்தமனம் ஆகிறது. இந்த நேரத்தில் விவாகம்,

உபநயனம் போன்ற சுப காரியம் செய்யக்கூடாது.

ஏழு கிரக சேர்க்கை: 7 கிரக சேர்க்கையானது லக்னத்திலோ இரண்டாமிடத்திலோ ஏற்பட்டால் நன்று. இதற்கு நீளகயோகம் என்று பெயர். ஏழாம் இடத்தில் ஏற்படுவது நல்லதல்ல.

ஜெனன லக்னம் முதல் ஏழாம் இடம் வரை இடைவிடாது பூக்கள் தொடுத்தாற்போல் கிரகம் இருந்தால் கிரகமாலிகா யோகம் இதை வஜ்ர யோகம் எனவும் கூறுவர். இந்த யோகம் உள்ளவர்

நல்லறிவுடையசீமானாக, புண்ணியச் செயல்களைச் செய்பவராக அளவில்லாத யோகத்தை உடையவராக விளங்குவார்.

ஒன்று முதல் ஆறு வரை கிரகம் இருந்தால் சக்கிரதார யோகம்.

ஒன்று முதல் ஐந்து வரை கிரகம் இருந்தால் பாசக யோகம்

ஒன்று முதல் நான்கு வரை கிரகம் இருந்தால் கேதாரயோகம்.

ஒன்று முதல் மூன்று வரை கிரகம் இருந்தால் சூல யோகம்.

ஒன்று மற்றும் இரண்டில் இருந்தால் நீளக யோகம் எனப்படும்.

இதில் நீளக யோகம் சூல யோகம் பெரும்பாலான ஜாதகங்களில் காணலாம்.

இவர்கள் கல்வி, செல்வம், சுகயோகம் உடையவர்களாக இருப்பர்.

கேதார யோகம் 10 சதவீத ஜாதகங்களிலேயே காணப்படும். இவர்கள் பூமி யோகம் தனலாபம் பெற்று பலருக்கு உபகாரம் செய்து நலம் காண்பர்.

பாசக யோகம் 5 சதவீத ஜாதகத்திலேயே காணப்படும். இவர்கள் அரசாட்சி புரிபவர்கள், மக்களால் போற்றப்படுபவர்கள். திரண்ட செல்வம் பெறுவார்கள், மேதாவி யாவார்கள்.

சுக்கிரதார யோகம், கிரகமாலிக யோகம் உள்ள ஜாதகங்களைப் பார்ப்பது மிக அரிது.

இவ்வகை ஜாதகத்தில் கிரகங்கள் லக்னம் சுபவர்க்கம் ஏறி இருப்பார்கள்.

இந்த உலகத்துக்கே அரசனாக, குருவாக விளங்கலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

லக்னத்திற்கு 9ம் இடத்தில் சுக்கிரன் சனி ராகு இணைந்தால் பிரம்மஹஸ்த்தி தோசம் ஆகும். இதற்கு பரிகாரம் ராமேஸ்வரத்தில் செய்யப்படுகிறது.

பரிகாரம் செய்வதால் வேகம் மட்டுப்படுகிறது அன்றி பாபங்கள் தொலைந்து விடுவதில்லை.