
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ஒருவரது பேச்சு மட்டும் பயன்படுவதில்லை, கண்களும் தான். ஆம், கண்களாலேயே பேசுபவர்கள் மற்றும் பதிலளிப்பவர்கள் பலர். ஒருவரது எண்ணங்களை அவரது கண்களைக் கொண்டே சொல்ல முடியும். உதாரணமாக, ஒருவர் உங்களிடம் பொய் சொன்னாலோ அல்லது உங்களை விரும்பினாலோ அவற்றை அவர்களது பார்வையின் மூலமே அறிந்து கொள்ள முடியும். இங்கு ஒருவரது கண்களைக் கொண்டு என்னவெல்லாம் அறிந்து கொள்ள முடியும் என காண்போம். அதைப் படித்து இனிமேல் யாராவது உங்களுடன் பழகினால், அவர்களது பார்வையைக் கொண்டே அவர்களை அறிந்து கொள்ளுங்கள்.
காதல்
ஒருவர் உங்களைக் காதலிக்கிறார் என்றால் அவரது கண்களில் ஒரு விசித்திர தீப்பொறி அடிக்கடி வீசும். மேலும் அவர்கள் ஒருவித ரொமான்டிக்கான பார்வை பார்ப்பதோடு, அவர்களது கண் இமைக்கும் விதத்தில் மாற்றம் தெரியும்.
கடலைப் போடுபவர்
ஒருவர் உங்களை வெறுமனே கவர்ந்து கடலைப் போட நினைக்கிறார் என்றால், அவர்களது பார்வையில் மாறுதல்கள் தெரியும். அதுவும் புன்னகையுடன், அவர்களது கருவிழிகள் அடிக்கடி உங்களை பார்த்தவாறு எந்த ஒரு செயலையும் செய்வார்கள்.
பொய் சொல்வது
உங்களிடம் ஒருவர் பொய் சொன்னால் அவர்களது கண்களே அதை நன்றாக வெளிக்காட்டும். பொய் சொல்லும் போது, ஒருவரின் கண்கள் முகபாவனைக்கு ஏற்றவாறு இருக்காது. முக்கியமாக ஒருவர் பொய் சொன்னால், அவர்கள் மற்றவர்களின் கண்களைப் பார்த்து பேச தயங்குவர்.
கோபம்
ஒருவர் உங்கள் மீது கோபமாக இருந்து, அதை வெளிப்படையாக கூறாமல் இருந்தால், அதை அவர்களது கண்களே வெளிக்காட்டும். எப்படியெனில், கோபமாக இருக்கும் போது அவர்களது கண்கள் சிறியதாக காணப்படும். அவர்கள் பார்க்கும் விதத்தில் ஒருவித மாற்றத்தை நீங்களே நன்கு காண முடியும்.
போதையில் இருப்பது
ஒருவர் போதையில் இருந்தால், அதை அவர்களது கண்ளைக் கொண்டு எளிதில் கண்டுபிடிக்க முடியும். எப்படியெனில் போதையில் இருப்பவரின் கண்ணின் மணி சிறியதாக காணப்படும். முக்கியமாக கருவிழிகள் அடிக்கடி மேலே செல்லும்.
பகை அல்லது வெறுப்புணர்வு
உங்களை வெறுப்பவர்களையும், அவர்களது கண்களைக் கொண்டு அறியலாம். நீங்கள் சென்சிடிவ்வானவர் மற்றும் வலிமையான உணர்வுகளைக் கொண்டவராயின், உங்களுடன் பழகுபவர்கள் உங்களை வெறுக்கிறாரா அல்லது விரும்புகிறாரா என்பதை அறிய முடியும். அதிலும் ஒருவர் உங்களை வெறுத்தால், அவர் உங்களை அன்பான பார்வையில் பார்க்கமாட்டார் மற்றும் புன்னகைக்கவும் மாட்டார்.
உடல்நிலை சரியில்லை
ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார் என்பதையும் அவர்களது கண்களைக் கொண்டு அறியலாம். எப்படியெனில், இந்நிலையில் இருப்பவரின் கண்கள் தூங்கி எழுந்ததும் எப்படியிருக்குமோ அப்படி இருப்பதோடு, கண்கள் சிறியதாகவும் காணப்படும்.