Header Banner Advertisement

டுபாக்கூர் எலக்ட்ரானிக் பொருள்களை கண்டுபிடிப்பது எப்படி ?


Fake electronic object

print

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் போலிகள் வந்துவிட்டது. அசலை போலவே இருக்கும் போலிகளை கண்டறிவது சிறிது கடினம்.

முக்கியமாக எலக்ட்ரானிக் பொருள்களில் போலிகள் அதிகம் வந்துவிட்டது. போன்கள், மொபைல் சார்ஜர் போன்றவற்றில் உள்ள போலிகளுக்கும் நிஜங்களுக்கும் வித்தியாசமே தெரிவதில்லை.

அவற்றில் உள்ள சில வித்தியாசங்களை நாம் உன்னிப்பாக கண்டால் மட்டுமே அதனை போலி என நம்மால் கண்டறிய முடியும்.

நாம் வாங்கும் சார்ஜர் போன்ற எலக்ட்ரானிக் பொருள்களை வாங்கியவுடன் நாம் அங்கேயே வைத்து சரிபார்ப்பது முக்கியமாகும்.

உண்மையான நிறுவன பொருள்கள் மொபைல் போன்ற பொருள்களை Packaging செய்யும் போது அதில் எந்த குறையும் இருக்காது. ஆனால் போலியானவற்றில் தவறுகள் இருக்கும்.

பொருள்களை பற்றிய User Manual அந்த இடத்தின் பொதுவான மொழியிலோ அல்லது மக்களுக்கு புரியும் மொழியிலோ தான் இருக்கும். ஆனால் போலியானவற்றில் அவ்வாறு இருக்காது.
குறிப்பிட்ட பொருளை குறிப்பிடும் பெயரிலோ அல்லது அதன் முத்திரையிலோ சிறிது வித்தியாசமானது காணப்படும்.

அசல் நிறுவனங்கள் வெளியிடும் சார்ஜர் போன்ற பொருள்களில் இரண்டு விதமான நிறங்கள் மற்றும் வடிவங்களில் வித்தியாசம் இருக்கும். ஆனால் போலிகளில் அவ்வாறு இருக்காது

சார்ஜரின் பயன்படுத்தும் வயர் போன்றவை தரமானதாக இருக்கும். ஆனால் போலிகளில் அவ்வாறு இருக்காது.