
ஒடிஸாவின் கடற்கரைகள் காலம்காலமாக தன்னைக் காண வருபவர்களுக்கு இயற்கை வளங்களை அள்ளி வாங்கிக்கொண்டே இருக்கின்றன. கேந்திரபாராவில் உள்ள பெந்தா கடற்கரை இவற்றில் ஒன்று. அலையாத்திக் காடுகள், அதிக தாவரங்களும் விலங்கினங்களும் உடைய இடம் இது.
புவனேஸ்வரத்திலிருந்து 130 கி.மீ. தள்ளி இருக்கிறது. கேந்திராபாரா மாவட்டம் ரயில் மூலம் இணைக்கப்படவில்லை. எனவே வாடகை கார்கள் மூலம்தான் இங்கு செல்ல முடியும். கட்டாக் – சந்த்பாலி மாநில நெடுஞ்சாலை வழியாக மூன்று மணிநேரம் பயணித்தால் இங்கு வந்தடையலாம். பூரி அல்லது கோனார்க் போல மிகப்பெரிய கடற்கரை அல்ல பெந்தா. ஆனால், இதனைச் சுற்றியிருக்கும் இடங்கள் மிக அழகானவை அதுதான் இதன் சிறப்பம்சம். இடதுபக்கத்தில் பரூணி கழிமுகம், வலதுபக்கத்தில் பிதார்கானிகா சரணாலயம் ஆகியவை உள்ளன. இந்த இடத்தில் இரவில் தங்குவதற்கு விடுதிகள் இல்லை என்பது துரதிர்ஷ்டமான ஒன்று.
உயர்ந்த பைன் மரங்களுக்கு இடையில் தங்கக் கம்பளம் போல கடற்கரை மணல் விரிந்துகிடக்கிறது. சிவந்த நாடுகளும், ஆலிவ் ரிட்லி ஆமைகளும் சுவாரஸ்யம் ஊட்டுகின்றன. இந்தக் கடற்கரை மேம்படுத்திய பட்டால் நாட்டில் வேறு எந்தக் கடற்கரைக்கு இணையாகவும் இது விளங்கும். பெந்தா கடற்கரை அறியப்படாத இடமாகவே இருக்கிறது.