Header Banner Advertisement

புண்ணியம் செய்து உள்ளோமா என்று ஜோதிடம் மூலம் எப்படி அறிவது ?


How do know by virtue Astrology

print

குழந்தைக்கு ஜாதகம் எழுதும்போது முதலில் எழுதும் பாடல் இது.

பதவீ பூர்வ புண்ணியானாம்’ என்ற வாசகம், நமது பூர்வஜென்மத்தில் செய்த புண்ணியத்தைக் குறிக்கிறது.

பூர்வ ஜென்மத்தில் அதிக புண்ணியம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெறுவார்கள்.

பூர்வஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்கிறோமா என்பதை அவரவர் ஜாதகத்தின் மூலம் அறியலாம்.

1.ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து (லக்னமே 1-ஆம் இடம் ஆகும்) எண்ண வரும் 5-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும்.

2.அந்த வீட்டுக்கு அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி ஆவார்.

3.பூர்வ புண்ணியத்துக்குக் காரகன் குரு.

ஒருவரது ஜாதகத்தில் 5-ஆம் வீடும், 5-ஆம் வீட்டோனும், குருவும் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் அதிகம் புண்ணியம் செய்து, அந்தப் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக இந்த மண்ணுலகில் அவதரித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஒருவரது ஜாதகத்தில் 5-ஆம் இடமும், 5-ஆம் வீட்டோனும், குருவும் அதிபலம் பெற்றிருந்தால் குறிப்பிட்ட ஜாதகருக்கு உயர் பதவி வகிக்கும் யோகம் நிச்சயம் உண்டாகும்.

உதாரணமாக மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 5-ஆம் இடம் சிம்மம். இந்த ராசியின் அதிபதி சூரியன். இவர் சிம்மத்தில் ஆட்சியாகவோ, மேஷத்தில் உச்சமாகவோ இருந்தால் பலம் பெற்றவர் ஆவார்.

இந்த சூரியனுடன் குரு சேர்ந்திருந்தாலோ, சூரியனை குரு பார்த்தாலோ சிவராஜ யோகம் ஏற்பட்டு,
சிவபெருமானின் அருளால் உயர்பதவி யோகம் உண்டாகும். குறிப்பிட்ட ஜாதகர் சிவ வழிபாடு செய்வதன் மூலம் மேலும் சிறப்புக்களைப் பெறமுடியும்.

செவ்வாய் சிம்மத்திலும், குரு மேஷத்திலும், சூரியன் தனுசிலும் ஒருவர் வீட்டில் மற்றவர் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாக இருந்தாலும் உயர் பதவி கிடைக்கும்.

இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் ராஜயோகமும் ஸித்திக்கும்

அரசாங்கத்தில் உயர் பொறுப்புள்ள அமைச்சர் பதவி கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் 1, 4, 7, 10-ஆம் இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். இவை விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும். 1, 5, 9-ஆம் இடங்கள் திரிகோண ஸ்தானங்கள் ஆகும். இவை லட்சுமி ஸ்தானங்கள் ஆகும். ஒரு கேந்திரத்துக்கு அதிபதியும், ஒரு திரிகோணத்துக்கு அதிபதியும் ஒன்றுசேர்ந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ இணைந்திருப்பது யோகமாகும். இதன் மூலமும் ஒருவருக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும்.

இதில் 10-ஆம் இடம் அதிக பலமுள்ள உயர் கேந்திர ஸ்தானம் ஆகும். 9-ஆம் இடம் உயர் திரிகோண ஸ்தானமாகும்.

ஒருவரது ஜாதகத்தில் 9-ஆம் வீட்டோனும், 10-ஆம் வீட்டோனும் ஒன்று கூடி வலுத்திருந்தால் தர்மகர்மாதிபதி என்ற உயர்ந்த, விசேஷமான யோகம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் உயர்பதவியை மிகச் சுலபமாகப் பெறுவர். சரித்திர புருஷராகவும் முடியும். அவரது புகழ் நீடித்து நிலைத்து என்றும் அழியாமல் இருக்கும்.

”நாம் இன்று செய்கிற புண்ணியச் செயல்களே மறுபிறவியில் நமக்கு நன்மையைத் தரும். இன்றே ஒரு நற்செயலை செய்து விட்டு, நாளையே அதற்குரிய பலன் கிடைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. நேற்று அன்னதானம் செய்த ஒருவருக்கு இன்று ஒரு சோதனை வந்து விடக்கூடும். ஐயையோ! நேற்று தானே தானம் செய்தோம். இன்று சோதனை வந்துவிட்டதே என்று புலம்புவது சரியானதல்ல.

இது கடந்தபிறவியில் செய்த செயலுக்கான தண்டனை. இப்பிறவி புண்ணியம் ஆண்டவனின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதற்குரியநற்பலனாகிய வட்டி அடுத்த ஜென்மாவில்கிடைக்கும்.”