
எதிரானதை எண்ணினால் உங்கள் உணர்ச்சிகளை எளிதில் வெற்றி அடையலாம் !
உங்கள் உணர்ச்சிகளை உற்று கணித்து பாருங்கள் ,
இப்போது உங்களிடம் ஒரு மந்தமான உணர்ச்சி ஏற்படுவதாக வைத்து கொள்ளுங்கள் .,
ஒரு டம்ளர் தேநீர் அருந்தி விட்டு ,நிதானமாக கண்களை மூடி கொண்டு சோர்வுக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த காரணத்தை நீக்க முயற்சி செய்யுங்கள் .,
இந்த உணர்ச்சியை நீக்குவதற்கு சிறந்த முறை அதற்கு நேர்மாறான உணர்ச்சியை பற்றி எண்ணுவது தான் .,
உடன்பாடு எதிர்மறையை வெல்லுகிறது .,
இது இயற்கையின் மகத்தான சக்திமிக்க நியதி ஆகும் ,
இப்போது சோர்வுக்கு எதிரான குணத்தை பற்றி சிந்தித்து ,உற்சாகத்தை பற்றி நினையுங்கள் உற்சாகத்தினால் ஏற்படும் பலனை பற்றி நினையுங்கள் ,இந்த பண்பு உங்களுடம் இருப்பதாக உணருங்கள் ,நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று உணருங்கள் .,
உற்சாகம் அடையும் சோர்வு மறையும் .,இது தான் யோகிகளின் பாவனை முறையாகும் .,
இதேபோல் இதர விரும்பத்தகாத உணர்ச்சிகளையும் போக்கலாம் ,
கோப உணர்ச்சி இருந்தால் – அன்பை பற்றி எண்ணுங்கள்
கடின சித்தம் இருந்தால் – கருணையை பற்றி நினையுங்கள் ,
காமம் தலை தூக்கி நின்றால் – பிரம்மசரியத்தின் நன்மைகைளை நினையுங்கள் / சிந்தியுங்கள் .,
நேர்மை குறைவு காண படும் போது – நேர்மையையும் ,நாணயத்தையும் நினையுங்கள் .,
கஞ்சத்தனம் இருந்தால் – தாராள சிந்தையும் ,வள்ளல்களையும் நினையுங்கள் .,
மோஹம் ஏற்ப்பட்டால் – விவேகத்தையும் ஆத்ம விசாரத்தை பற்றி நினையுங்கள் .,
அகந்தை தோன்றினால் – அடக்கத்தை பற்றி எண்ணுங்கள் .,
உள்ளொன்று வைத்து புறமொன்று நடிக்கும் ஆஷாடபூதித்தனம் தோன்றினால் – கபடமின்னை பற்றி எண்ணி அதனால் ஏற்படும் கணக்கிடலங்கா நன்மை பற்றி சிந்தியுங்கள் .,
பொறாமை தோன்றினால் – பெருந்தன்மையை பற்றி எண்ணுங்கள் .,
கோழைத்தனம் ஏற்ப்பட்டால் – வீரத்தை பற்றி சிந்தியுங்கள் .,
இதே போல் மற்ற குணங்களுக்கும் எண்ணுங்கள் ,நீங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை விரட்டி உடன்பாடு உணர்ச்சிகளில் நிலைத்து நிற்பீர்கள் .