
கிரக சேர்க்கை என்பதை ஒரே இராசியில் இருப்பது என்று பொருள் கொள்ளக் கூடாது.
3 பாகைகளுக்குள் இரண்டு கிரகங்கள் இருந்தால் மட்டுமே சேர்க்கை எனக் கொள்ள வேண்டும்.
10 பாகைகளுக்குள் மூன்று கிரகங்கள் இருக்குமானால் அதை மூன்று கிரகங்களின் சேர்க்கை என எடுத்துக்கொண்டு பலன் சொல்ல வேண்டும்.
புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருந்தால் புதன் குரு, புதன் சுக்கிரன், குரு சுக்கிரன் என மூன்று விதமான சேர்க்கைகளுக்கும் பலன் சொல்ல வேண்டும்.
கிரகங்கள் இருக்கும் ராசி, அந்த ராசிகளுக்குக் கிரகங்களுடன் உள்ள சம்பந்தம்,
அந்த ராசி லக்னத்திலிருந்து எத்தனையாவது பாவமாக வருகின்றது என்பதையெல்லாம் பொறுத்துப் பலன்களை யூகித்துச் சொல்ல வேண்டும்.