
பயணத்தைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களில் ஒன்று சிறுபயணங்கள் குறைவான செலவு பிடிக்கும் என்ற நினைப்பாகும். உண்மையில் ஒருமாதகால நீண்ட பயணம் என்பது நான்கு ஒருவார காலப் பயணங்களைவிட மிகவும் விரைவானது. அத்துடன் ஒருவார கால செலவுதான் ஒருமாதக் காலப் பயணத்துக்கும் பிடிக்கும் அதுபோலவே ஓராண்டுக் காலம் தொடர்ந்து விடுமுறை எடுத்துக்கொண்டு பயணிப்பது, 10 ஆண்டு காலம் அவசர அவசரமாய் மேற்கொள்ளும் இருவார பயணங்களைவிட மிகச் சிறப்பானதாகும். நல்ல அனுபவத்தை தரும். பட்ஜெட், திட்டமிடுதல் ஆகியவை மட்டுமல்ல. இதன் ரகசியம். மனோநிலை சார்ந்த அனுபவம் இது. நான் தரும் ஐந்து வழிமுறைகள் நீண்ட பயணத்தை சிக்கனமாக்க உதவு.
இடைத்தரகர்கள் வேண்டாம்
பயணத்துக்கான விவரங்களை முன்பே வாங்கிவிடும் ஆர்வத்தை குறையுங்கள். உகாண்டா காடுகளைப் பற்றிய மும்பையில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியின் விவரக் குறிப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும்தான். ஆனால், நீங்கள் நேரடியாக ஆப்பிரிக்கா வந்து அவற்றைப் பார்ப்பதற்கு ஆகும் செலவு அந்த கம்பெனிக்கு அளிப்பதைவிட மிகவும் குறைவாகதான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில் பயணம் செய்ய வேண்டும் என்கிற பிரச்சனையும் உங்களுக்கு தீராது. விமானப் பயணத்துக்கும் அப்படிதான். சலுகை விலையில் உலக்கைச் சுற்றிவரும் விமான டிக்கெட் வாங்கும் ஆர்வத்துக்கு விலை போகாதீர்கள். பயணத்தில் சென்றடையும் முதல் இடத்துக்கு ஒரு வழி டிக்கெட் வாங்குவது எப்போதும் சிறந்தது. அங்கிருந்து பயணத்துக்கு ஏற்றதுபோல் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். இது சிக்கனமானது. நல்ல பயண அனுபவமும் கிடைக்கும். நீண்டநாள் பயணம் என்பது உங்கள் சொந்த விருப்பப்படி பயணம் செய்தால் அனைத்தும் குறைவான செலவில் முடிவடையும்.
மெதுவாகச் செல்லுங்கள்
நீண்ட காலப் பயணத்தின் வசதிகளில் ஒன்று உங்கள் வேகத்துக்கு ஏற்ப பார்த்து அனுபவிக்கலாம். சிக்கனமானது. உள்ளூர் பொருளாதாரத்தை நன்கு அறிந்துகொள்ளமுடியும். எனவே திட்டமிடும்போது மத்திய அமெரிக்கா கன்னடத்தை ஆறு வாரத்தில் சுற்ற வேண்டும் என்று திட்டமிடாதீர்கள். இந்த நாட்களில் ஒரு நாடு அல்லது இரண்டு நாடு ஆகியவற்றை பார்த்தால் போதும். ஆசியாவை ஆறு மாதத்தில் சுற்றிவர திட்டமிடாதீர்கள். அதற்கு பதிலாக அதன் ஒருபகுதியைப் பார்க்கத் திட்டமிடுங்கள். ஒரு வருடம் விடுமுறை கிடைத்தாலும் 5 கண்டங்களையும் சுற்றிப் பார்த்து களைப்படைந்து விடாதீர்கள். நீண்டகாலப் பயணம் என்பது ஒட்டுமொத்தமாக கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் அல்ல. உங்கள் பாஸ்போர்ட்டில் எத்தனை நாடுகளின் முத்திரை இடம்பெறுகின்றன என்பதல்ல பயணத்தின் மதிப்பு. 40 நாடுகளை சுற்றுவதைவிட ஒரு நாட்டின் அமைதியான, முழுமையான அனுபவம்தான் எப்போதும் சிறந்தது.
உள்ளூர் பொருளாதாரத்தை அறிந்துகொள்ளுங்கள்
பணத்தைச் சிக்கனப்படுத்துவதற்கும், அதிகமான பயண அனுபவத்தைப் பெறுவதற்கும் சிறந்தவழி ஆடம்பர ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்களைப் புறந்தள்ளுவதே. இவற்றுக்குப் பதிலாக தங்குவதற்கு தூய்மையான, அடிப்படை வசதிகள் கொண்ட விடுதிகளை நாடுங்கள். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறந்து செல்வதற்கு பதிலாக ரயில்கள், உள்ளூர் பேருந்துகள், ஷேர் டாக்சிகள் ஆகிவற்றை நாடுங்கள். வசதியான உணவகங்களில் சாப்பிடுவதற்குப் பதிலாக சாதாரண உணவகங்களுக்குச் செல்லுங்கள். உள்ளூர் சந்தைகளில் பொருள் வாங்குவதும் சாதாரண ஹோட்டல்களில் தங்குவதும் உள்ளூர்க்காரர்கள் நடைமுறையை அறிந்துகொள்ள உதவும். பேரம் பேசுவதிலிருந்து பிச்சைக்காரகளைச் சமாளிப்பது வரை உதவும்.
கற்றுக்கொள்ளுங்கள், வளைந்து கொடுங்கள்
எவ்வளவுதான் நீங்கள் கூர்மையாகத் திட்டமிட்டிருந்தாலும் முதல் இரண்டு வாரங்களில் நீங்கள் கற்றுக்கொள்வதுதான் நீண்ட காலத்தில் பலன் அளிக்கும். பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்வதற்கும் பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்வதற்கும் தயாராக இருங்கள். உள்ளூர்க்காரர்கள். சகப்பயணிகள் தரும் ஆலோசனைகளை கேட்க தயாராக இருங்கள்.
பயணத்தில் வேலை செய்யுங்கள்
நீங்கள் பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதல்ல. நீண்டகாலப் பயணத்தின் ஒரு சிறப்பு, ஒரு இடத்தில் தங்கி அதை நன்கு அறிந்து கொள்வது. உள்ளூரிலேயே ஒரு வேலையைத் தேடிக்கொள்வது சிறப்பானது. (ஆங்கிலம் கற்றுத் தருவது, ஸ்கூபா டைவிங் கற்றுத்தருவது, ஐடி பணிபுரிவது, பாரில் வேலை செய்வது போன்றவை) அல்லது உள்ளூர் தொண்டு நிறுவனங்களில் தேவைக்கு ஏற்ப பணிபுரியலாம்.
பயணக் கட்டுரையாளர்: ரால்ஃப் பாட்ஸ்