Header Banner Advertisement

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்கள்!


Human body interesting things

print

பல செல்களால் ஆன மனித உடல் ரகசியம் நிறைந்த ஒன்று. மனித உடலில் எண்ணிலடங்கா விந்தைகளும், ஆச்சரியங்களும் நிரம்பியுள்ளன. மனித உடலை நம் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பல வியக்க வைக்கும் உண்மைகளை வெளியிட்டுக் கொண்டு தான் உள்ளனர்.

அந்த வகையில் இங்கு ஒருசில மனித உடலைப் பற்றிய சில வியக்க வைக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து இதுவரை நீங்கள் அறிந்திராததை தெரிந்து கொள்ளுங்கள்.

சுவாரஸ்ய விஷயம் #1

* வயிற்றில் வளரும் சிசுவின் கையில் கைரேகைகளானது மூன்றாவது மாதத்தில் இருந்து உருவாகின்றன.

சுவாரஸ்ய விஷயம் #2

* மனித தாடை சுமார் 80 கிலோ எடையுள்ள பொருளை அசைக்கக்கூடிய அளவில் சக்தி கொண்டது.

சுவாரஸ்ய விஷயம் #3

* ஆண்களின் உடலிலேயே முகத்தில் வளரும் தாடி தான் நீளமாக இருக்கும். ஏனெனில் ஒரு ஆண் தன் வாழ்நாளில் ஷேவிங் செய்யாமல் இருந்தால், 30 அடி நீளம் வளரும்.

சுவாரஸ்ய விஷயம் #4
* மனிதனின் உடலில் கால் விரல் நகங்களை விட கை விரல் நகங்கள் வேகமாக வளரும்.

சுவாரஸ்ய விஷயம் #5

* மனித உடலில் 600-க்கும் அதிகமான தசைகள் உள்ளன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

சுவாரஸ்ய விஷயம் #6

* ஒருவருக்கு 60 வயதாகும் போது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களின் பெரும் பகுதி அழிந்து போய்விடும்.

சுவாரஸ்ய விஷயம் #7

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது என்பது தெரியுமா…!

சுவாரஸ்ய விஷயம் #8

* உலகில் பொதுவாக காணப்படும் இரத்த பிரிவு ஓ என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அபூர்வமான இரத்த பிரிவு ஏ. எச். இப்படி ஒரு இரத்த பிரிவு கண்டுப்பிடிக்கப்பட்ட பின், உலகில் 10 பேரிடம் மட்டும் இந்த இரத்த பிரிவு இருப்பது அறியப்பட்டது.

சுவாரஸ்ய விஷயம் #9

* மனித உடலில் உள்ள நரம்புகள் அனைத்தையும் நீளமாக்கினால், அது 45 மைல் நீளத்தில் இருக்கும்.

சுவாரஸ்ய விஷயம் #10

* தும்மலின் போது இதயம் உட்பட உடலின் அனைத்து பாகங்களும் நின்றுவிடும்.

சுவாரஸ்ய விஷயம் #11

* மனித உடலில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 300 மில்லியன் அணுக்கள் இறக்கின்றன.

சுவாரஸ்ய விஷயம் #12

* நமது உடலில் மிகவும் சிறிய பிட்யூட்டரி சுரப்பி தான், நம் உடலை பெருமளவு கட்டுப்படுத்துகிறது.