Header Banner Advertisement

பெரும்பாலான பெண்களுக்கு குடல் உளைச்சல் நோய் உருவாக காரணம்


Intestinal obesity disease for women

print

எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

காலையில் பால் பாக்கெட் வராததில் தொடங்கும் டென்ஷன் திடீரென வேலைக்காரி லீவு போடுவது, குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருபது என இப்படியே தொடர்கிறது.

இதனால் ஏற்படும் மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களைம் இது அதிகம் பாதிக்கிறது.

அறிகுறிகள்: வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாபிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும். அடிவயிற்றில் வலி இருபதால் பலர் குடல்வால் நோய் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும்.

சிலர் அமீபா கிருமியின் தாக்குதல் என நினைத்து அதற்கு மருந்து சாப்பிடுவார்கள். ஆனாலும் வலி தீராது. எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.