Header Banner Advertisement

நகைகள் பராமரிப்பு குறித்த தகவல்கள்


Jewelry maintenance information

print

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து   குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.