
சுக்ரன் எனும் அசுரகுருவின் சுபாவம் மற்றும் பொதுபலன்களை பற்றியும் கிரகங்களின் வரிசைகிரமத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கிரக வரிசைகிரமம் என்பது உயிரினங்களோடு ஒன்றிய தன்மையை குறிக்கிறது.
அறிவியலின் கூற்றின் படிதான் நம்முடைய ஜாதக கட்டமானது அமைந்துள்ளது.ஜாதக கட்டத்தை இரண்டாக பிரித்தால் நமக்கு தெளிவாக சந்திரன் மற்றும் சூரியக்குடும்பம் தெளிவாக தென்படும். சுக்ரன் ஆண்மையின் அளவு, பெண்மையின் தன்மை, வாகன பிரயோகம், கலைகள் கையாளும் திறமை, வசிகரம், துணை, காதல்,எதிர்கால தொடர்பு இயந்திரங்கள் ஆகியவைகளை தெளிவுபடுத்தும் தன்மையுடையது.
பொதுவாக சுக்ரன் மற்ற கிரகங்களோடு இணையும் போது எண்ணற்ற பலன்களை தரவல்லது., அசுரகுரு என்பதனால் நன்மை மற்றும் தீமைகளை வழங்கவல்லது
சூரியனோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன்
பொதுவாக சுக்ரன் சூரியனோடு சேரும் போது ஜாதகர் வாசனை பிரியர்களாக இருப்பார்கள்.உடலுறவில் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். செல்வம் சேரும் தன்மையிருந்தாலும் சூரியனின் சூடானது அழிக்கும் தன்மையை தரும். மின்னணு அறிவயில் நாட்டம் இருக்கும். விவாகரத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
புதனோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன்
விலங்கினபிரியர்களாக இருப்பார்கள். பெண் தன்மை அதிகமாக காணப்படும். பிரயாணம் செய்வதில் நாட்டம் உள்ளவர்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதில் வல்லவர்கள்.
செவ்வாயோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன்
சுக்ரன் சல்லபாத்தை கூறிப்பது. இளஞ்சூடு (செவ்வாய்) அடுத்த பாலினத்தின் மீது மிகவும் ஈர்ப்பை அதிகப்படுத்தும் தன்மையுடையது. காதல் வயப்படுதல் இயல்பாக மாறும். கனவு தொல்லை அதிகமாக இருக்கும். புத்திகூர்மை இயல்பாகும். கணினி பிரியர்களாக இருப்பார்கள்.
சந்திரனோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன்
வெளிநாடு யோகம் மற்றும் சுக்ரனின் முழு தன்மையை வெளிபடுத்த வழிவகுக்கும். உடல் உபாதைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. வாகனம் இயக்குவதில் வல்லவர்களாக காணப்படுவார்கள்.
குருவோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன்
பொதுவாக நல்ல சேர்க்கையாக எடுத்து கொள்ளபடுவதில்லை. குடும்பத்தில் சச்சரவு மற்றும் மணமுறிவு ஏற்படும். தொழிலில் ஆரம்பத்தில் நன்மையையும் பிற்பாதியில் துரோகம் மற்றும் கடனால் பாதிப்பு வர வைக்கும். ஆரோக்யத்தை பொறுத்தமட்டில் இடுப்பிற்கு கிழ்பாகம் பாதிப்பு தரும்.
சனியோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன்
கட்டுமான பொறியியலின் நாட்டம் மற்றும் ஆளுமை திறன் அதிகப்படுத்தும். சிறந்த மின் அறிவியல் அறிஞர்களாக மாறக்கூடும். செல்வம் மற்றும் ஆன்மிக நாட்டம் அதிகமாகும். பெண் தெய்வ வழிபாடுகள் நன்மைகள் தரும்.
ராகு மற்றும் கேதுவோடு சேர்கை பெற்ற சுக்கிரன்
பொதுவாக ராகு சனியின் தன்மையையும் மற்றும் கேது செவ்வாயின் தன்மையையும் கொண்டது. மேற்கண்ட சனி மற்றும் செவ்வாயின் சேர்ககையின் பலனே தரும் என்று கூற இயலாது. ராகு மற்றும் கேது உந்து சக்தியாக கருத்தப்படுகிறது அதனால் தான் அதற்கான இடம் ஜாதகத்தில் குறிப்பிடுவதில்லை.
குறிப்பு: உங்களுடைய ஜாதக வீட்டின் அமைப்பு படி பலன்கள் கூடவும் குறையவும் வாய்ப்புகள் உள்ளது.