
கொல்லிமலை எப்போதும் மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் கொல்லிப்பாவை என்ற எட்டுக்கை அம்மன் மற்றும் சித்தர்கள்தான் காரணம் என்கிறார்கள். இந்த மர்மம் நிகழ்வதற்கு இந்த மலையில் காணப்படும் அதீத மூலிகை வளமும் ஒரு காரணம்.
இந்த மர்மம் நிறைந்த மலைப் பகுதியில் ஐந்து அருவிகள் இருக்கின்றன. அந்த அருவிகளை பற்றிய ஏராளமான கூடுதல் தகவல்களுடன் இந்த காணொளி வெளிவந்திருக்கிறது. கொல்லிமலை சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.