Header Banner Advertisement

இறைவா உன் கருணையால்….


Lord thy grace

print

கதிரோன் வருமுன் விழித்திடல் வேண்டும்

விழித்தும் உனை நான் தொழுதிடல் வேண்டும்

தொழுததும் பணிகள் தொடர்ந்திடல் வேண்டும்

தொடர்ந்த பணிகள் நலமாய் முடிந்திடல் வேண்டும்

முடிந்திட்ட பணியால் புகழ்பெற வேண்டும்

பெற்ற புகழ் நிலைத்திடல் வேண்டும்

நிலைத்த செல்வமனைத்தும் கிடைத்திடல் வேண்டும்

நித்தம் உனை நான் மறவாமை வேண்டும்

நினைப்பனவெல்லாம் நடந்திட வேண்டும்

நடப்பனவெல்லாம் நல்லதாய் வேண்டும்

நல்லதாய் இருப்பது தொடர்ந்திட வேண்டும்

தொடர்ந்திடும் வாழ்க்கையில் இன்பம் வேண்டும்

இன்பம் என்றும் பெறுதல் வேண்டும்

பெற்ற இன்பம் மற்றோர்க்கு அளித்தல் வேண்டும்

அளிக்கும் செயலில் மாறா அன்பு வேண்டும்

அன்பே வாழ்க்கையாய் வாழ்தல் வேண்டும்

வாழும்போது புகழதை ஈட்டல் வேண்டும்

ஈட்டிய புகழ் என்றும் இருத்தல் வேண்டும்

இருக்கும் போது இன்முகம் வேண்டும்

இன்முகத்தோடே இறத்தலும் வேண்டும்

COURTESY & SOURCE : – பழனி – சென்னை – 87.