Header Banner Advertisement

மதுரை கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட மாநகராட்சி நிர்வாகம் !


madurai Collector Veera Raghava Rao

print

தார்சாலை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஆட்சியர் வீரராகவராவ் போட்ட உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் பறக்கவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளது ஊடகங்கள் மூலம் அம்பலமானது அனைவரும் அறிந்ததே.

மதுரை வசந்த நகர் (வார்டு எண் 77) ராமலிங்க நகர் 3வது குறுக்குத் தெருவில் கடந்த 2006ம் வருடத்திற்கு பின் தார்ச்சாலை போடப்படாத நிலையில் இரண்டு முறை புதியதாக தார்ச்சாலை போடப்பட்டதாக சாலை ஒப்பந்தகாரர்களுக்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பணம் வழங்கி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்

இந்த தார்ச்சாலை முறைகேட்டினை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அப்பகுதியினர் ராமலிங்க நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பெயரில் கடந்த 19-06-2017 அன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பதிவிட்ட 2017/9005/24/597437/0619 என்ற எண் கொண்ட புகாரினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

20179005245974370619

அதன் அடிப்படையில் அப்பகுதி மக்கள் வசிக்கும் தெருவிற்கு அடிப்படை அத்தியாவசிய தேவையான தார்ச்சாலை வசதியை உடனடியாக செய்து கொடுத்திடவும்., தார்ச்சாலை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி மீது நடவடிக்கை எடுத்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார் .

vasntha nagar

அவர் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசின் இணையதளம் மூலம் தெரிய வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் நேர்மையான அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது இந்த தார்ச்சாலை முறைகேட்டில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது உண்மை என்றும் ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது . மேலும் அப்பகுதியில் உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றும் மாநகராட்சி கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது .

அரசு விழா எனும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவிட்டு கட்சியின் புகழை பரப்பும் அரசியலை செய்யும் கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதியாக இனி வரும் காலங்களில் பொது மக்கள்  தேர்தெடுத்து  அவர்களை  ஆட்சியர்களாக உருவாக்கினால்  அவர்கள் வருங்கால சந்திதியினர் இந்த நாட்டில் வாழமுடியாத அளவிற்கு நாட்டை நாசமாக்கிவிடுவார்கள் என்பது மட்டும் உறுதி .