
மதுரை மாநகராட்சி அதிகாரிகள் போடாத தார்ச்சாலை போடப்பட்டதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்ததால் மாநகராட்சி உதவி பொறியாளர் பாலமுருகன் என்பவர் அவர்கள் வசிக்கும் தெருவிற்கு குடிநீர் வழங்காமலும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமலும் அராஜக செயலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை வசந்த நகர் (வார்டு எண் 77) ராமலிங்க நகர் 3வது குறுக்குத் தெருவை தவிர்த்து அப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு புதிய தார்ச்சாலை போடப்பட்டது.
இந்த சூழலில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் மேற்படி தெருவிற்கு மட்டும் ஏன் தார்ச்சாலை போடவில்லை என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக பல முறை கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது அதிகாரிகள் அவர்களிடம் உங்களது தெருவிற்கு மட்டும் பேவர் பிளாக் சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கூறிவிட்டு இதுநாள் வரை அந்த தெருவில் தார்ச்சாலையோ, பேவர் பிளாக் சாலையோ அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் தெருவின் நுழைவாயிலின் அருகில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை இரவு நேரங்களில் வந்து அங்கு கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் அந்த தெரு மிகவும் பள்ளமான பகுதியாக இருப்பதால் சிறிய மழை பெய்தால் கூட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் வெகு நாட்களாக கழிவு நீராகத் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுச் சாலையையே குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்னர். மேலும் கழிவுப நீரில்ல் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் பல்வேறு தொற்று நோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை வசந்த நகர் (வார்டு எண் 77) ராமலிங்க நகர் 3வது குறுக்குத் தெருவின் அருகிலுள்ள மற்ற பகுதி வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாநகராட்சி குடிநீர் குழாய்களில் பகல் நேரங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் மேற்படி தெருவிலுள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இரவு நேரங்களில்தான் குடிநீர் வருகிறது. சில நேரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும்.
இதனால் இரவு நேரங்களில் குடிநீர் பிடிப்பதற்காக தூக்கம் கெட்டு பல மாதங்களாக அவதியடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் . இதுகுறித்து மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியில் இயங்கிவரும் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் பணியாற்றிய பல அதிகாரிகளிடம் புகார் அளித்தபோதிலும் எந்த பலனும் இல்லை.
மேற்படி தெருவில் குடிநீரில் திடீர் திடீரென கழிவுநீர் கலந்து வருவதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மாநகராட்சி ஆணையாளர் கவனத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது..
அதன் காரணமாக மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அந்த தெருவில் 5000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி வைத்து அதில் லாரி மூலம் குடிநீர் நிரப்பி அப்பகுதியினருக்க்கு வழங்கவும் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதை உடனடியாக சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் . எனவே அத்தெருவில் 5000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு சில வருடங்களாக குடிநீர் நிரப்பப்பட்டது. இருந்த போதிலும் இதுநாள்வரை அப்பகுதியில் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவரிடம் மேற்படி தெருவிலுள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் ராமலிங்க நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் பலமுறை எழுத்து மூலம் புகார் அளித்துள்ளனர். அப்போது அவர் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய அந்த தெருவில் பதிக்கப்பட்டுள்ள மாநகராட்சி குடிநீர் பிரதான குழாயை மாற்றி புதிய குழாய் பதிக்கவும், சாலை அமைப்பதற்கும் திட்டம் தயார் செய்யப்பட்டு உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக அனுப்பப்படும் என அவர்களிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவரது அலுவலகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த சூழலில் வசந்த நகர் ராமலிங்க நகர் பிரதான சாலையில் பல ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியால் பாதாள சாக்கடை உருவாக்கப்பட்ட போது கதவு எண் 25/5B வீட்டின் அருகில் மாநகராட்சியால் வைக்கப்பட்ட பாதாள சாக்கடைக்கான ஏர்வென்டை அகற்ற பொதுமக்கள் எவரும் புகார் அளிக்காத நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு ஏர்வென்டை அகற்றினர். இதனால் மேற்படித் தெருவில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வருவது மட்டுமல்லாமல் வீடுகளில் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் உதவி பொறியாளர் பாலமுருகன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு ஒப்பந்த லாரி மூலம் குடிநீர் வழங்கும் பணியையும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்படைக்க அவரது உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது.
அன்று முதல் மதுரை வசந்த நகர் (வார்டு எண் 77) ராமலிங்க நகர் 3வது குறுக்குத் தெருவில் மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள 5000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டிக்கு ஒப்பந்த லாரி மூலம் குடிநீர் நிர ப்புவதும் நிறுத்தப்பட்டது.
அப்பகுதிக்கு வந்த ஒப்பந்த லாரி ஓட்டுநரிடம் ஏன் சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் நிரப்பவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது மோட்டார் இல்லை எனக் கூறினாராம். மேலும் அந்த ஓட்டுநர் குடிநீர் பிடிக்கும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம். மேலும் இது தொடர்பாக சிலர் அந்த குடிநீர் லாரி ஓட்டுநரிடம் மாநகராட்சியால் வழங்கப்படும் இலவச குடிநீருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய போது “என்ன சட்டம் பேசுறியா ? நீ அதிகாரிடம் போய் புகார் கொடு. என்னை எவனும் ஒன்றும் செய்ய முடியாது” என அவர்களை அநாகரிகமாக திட்டினாராம்.
இதையடுத்து சிலர் உதவி பொறியாளர் பாலமுருகன் அலுவலகத்திற்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தெருக்களில் மதுரை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள 2000 / 3000 / 5000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் நிரப்புவதற்கு மோட்டார் இல்லாத குடிநீர் லாரிகளை ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி அந்த லாரிகளில் உடனடியாக மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.
ஆனால் உதவி பொறியாளர் பாலமுருகன் அப்பகுதியினர் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் மேற்படி தெருவில் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய அந்த தெருவில் பதிக்கப்பட்டுள்ள மாநகராட்சி குடிநீர் பிரதான குழாயை மாற்றி புதிய குழாய் பதிக்க திட்டம் தயார் செய்யப்பட்டு உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக அனுப்பப்படும் என உதவி பொறியாளர் பாலமுருகன் அப்பகுதியினரிடம் கூறியுள்ள நிலையில் மதுரை மாநகராட்சியில் பணியில் இல்லாத ஒருவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் உங்களது தெருவில் புதிய குழாய் பதிக்க அனைவரிடமும் கையெழுத்து பெற்று புதிய மனு அளித்தும் அவர்களிடம் ரூபாய் 5000 பெற்று தந்தால் தான் உடனடியாக புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுப்பதாக தொடர்ந்து கூறி வருவதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்த சூழலில் மதுரை வசந்த நகர் (வார்டு எண் 77) ராமலிங்க நகர் 3வது குறுக்குத் தெருவில் கடைசியாக எப்போது தார்ச்சாலை போடப்பட்டது என மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் எவரோ விசாரித்தபோது கடந்த 2006ம் வருடத்திற்கு பின் மேற்படி தெருவில் தார்ச்சாலை போடப்படாமலேயே இரண்டு முறை தார்ச்சாலை போட்டதாகவும் சாலை ஒப்பந்தகாரர்களுக்கு மதுரை மாநகராட்சியால் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்ததாம்.
மதுரை மாநகராட்சியில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மேற்படி தெருவில் தார்ச்சாலை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தினை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ராமலிங்க நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பெயரில் கடந்த 19-06-2017 அன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பதிவிட்ட 2017/9005/24/597437/0619 என்ற எண் கொண்ட புகாரினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
அதில் கடந்த 2006ம் வருடத்திற்கு பின் மேற்படி தெருவில் மதுரை மாநகராட்சியால் தார்ச்சாலை போடப்படாத நிலையில் இரண்டு முறை தார்ச்சாலை போட்டதாகவும் சாலை ஒப்பந்தகாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவலாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்., அவர்கள் வசிக்கும் தெருவிற்கு அடிப்படை அத்தியாவசிய தார்ச்சாலை வசதியை உடனடியாக செய்து கொடுத்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களது புகார் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசின் இணையதளம் மூலம் தெரிய வருகிறது.
இந்த சூழலில் அத்தெருவில் வசித்து வரும் வழக்குரைஞர் R.V.ரவி என்பவர் மேற்படி தெரு விவகாரத்தினை சட்ட ரீதியாக கையாள திட்டமிட்டு அந்த பகுதியில் மாநகராட்சியால் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்ட த்தின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் தரக்கோரி மதுரை மேலமராட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் எண் – 4 ன் உதவி ஆணையாளருக்கு கடந்த 22–06-2017 அன்று பதிவு தபால் மூலம் மனு அனுப்பியுள்ள நிலையில் அதற்கும் இது நாள்வரையில் உதவி ஆணையாளர் பதில் அளிக்கவில்லை. தனக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன்படி 30 நாட்கள் காலக் கெடுவுக்குள் மண்டலம் எண் – 4 ன் உதவி ஆணையாளர் முறையான எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனக் கூறி வழக்குரைஞர் R.V.ரவி முதலாவது மேல் முறையீட்டு மனுவினை மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு கடந்த 31-07-2017 அன்று பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞரின் புகார் மனு அளித்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியின் மாநகராட்சி உதவி பொறியாளர் பாலமுருகன் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் ஒப்பந்த லாரி ஓட்டுநர் குடிநீர் நிரப்புவதை தடுத்து நிறுத்தியும்., வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்க்கு வரும் சப்பளையை தடுத்து நிறுத்தியும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை அனுப்பாமலும் கடந்த சில வாரங்களாக அராஜக செயலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி புலம்பி வருகின்றனர். மேலும் மாநகராட்சி உதவி பொறியாளர் பாலமுருகன் சுயநல நோக்கில் வசந்தநகர் பகுதியிலுள்ள அக்ரினி குடியிருப்புக்கு மட்டும் அதிகமான குடிநீர் ஒப்பந்த லாரிகளை தினமும் அனுப்பி குடிநீர் சப்ளை அளித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைக்காமல் சுயநலமாக மெத்தன போக்கில் அராஜகமாக செயல்படும் உதவி பொறியாளர் பாலமுருகனை உடனடியாக மாநகராட்சி ஆணையாளர் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று அதிகார இருக்கையில் அமர்ந்துகொண்டு காட்டுதர்பார் செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்களின் வரிப்பணத்தினை கொள்ளையடித்து சொத்துக்களை வாரி குவித்தும்., தான் மற்றும் தனது குடும்பத்தினர் வயிற்றை வளர்க பணத்திற்க்காக பிணம் தின்னி கழுகுகள் பலர் உலகையே பலர் சுற்றி திரிவோர் மத்தியில் பிழைக்க வழியின்றி செய்வதறியாது விபசாரத்தொழிலில் ஈடுபட்டு உடலை விற்று பணம் சம்பாதித்து தனது குடும்பத்தினரை காப்பாற்றி வருபவர்கள் எவ்வளவோ மேல்…