
மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் வட்டார போக்குவரத்து அலுவலர், வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அரசு ஊழியர் அல்லாத சில அல்லக்கை இலஞ்சப் பேய்களை அவரவர் தனிப்பட்ட முறையில் அமரவைத்து வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் கட்டுப்பாட்டில் தெற்கு, வடக்கு, மத்திய என மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களில் போக்குவரத்து துறையின் பணிகளான வாகன உரிமம், வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குதல், வாகன வரி வசூலித்தல், வாகன விதிமுறைகளை கடைபிடித்தலை கண்காணித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
வட்டார போக்குவரத்து அலுவலரே தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இது தவிர வாகன ஆய்வாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நிர்வாகப் பணிகளை கவனிக்க அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் மேற்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர், வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் வசூல் வேட்டை நடத்துவதற்காக அரசு ஊழியர் அல்லாத சில அல்லக்கை பேய்களை அவரவர் தனிப்பட்ட முறையில் அலுவலகத்தில் அமர வைத்துள்ளார்களாம்.
அந்த அல்லக்கை பேய்களின் பிடிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிக்கி அங்கு லஞ்சம், லாவண்ய பேய்கள் தலைவிரித்து ஆடுவதால் லைசன்ஸ் மற்றும் புதிய வாகனங்கள் பதிவு செய்வோர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனராம்.
பொதுமக்கள் இணையதளம் மூலம் முறைப்படி பதிவு செய்து விட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றாலும் அங்கிருக்கும் அல்லக்கை பேய்கள் வழி மறித்து ஆயிரம் கொடு, 2 ஆயிரம் கொடு என வலுக்கட்டாயமாக பணத்தை பிடுங்கி கொள்ளுமாம் . வட்டார போக்குவரத்து அலுவலர், வாகன ஆய்வாளர்கள் அல்லக்கை பேய்களிடம் பணம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்த கொண்ட பின்னர்தான் பேய்கள் நீட்டும் பைலில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடுவார்களாம்.
இது ஒருபுறம் இருக்க வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் புதிய வாகனங்கள் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் நடத்துவோர் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலத்திற்கு வரும் பொதுமக்களிடம் இந்த புரோக்கர் பேய்கள் எதற்காக அவர்களிடம் சென்றீர்கள் என மிரட்டுவார்களாம். மேலும் அவர்கள் வாங்கும் கட்டணத்தைக் காட்டிலும் எங்களிடம் கட்டணம் குறைவு. அதனால் நேரடியாக நீங்கள் உங்களது பணியை எங்களிடம் கொடுங்கள் எனக் கேட்பதால் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் செய்வதறியாது விழி பிதுங்கி புலம்பி வருகின்றனராம் .
இது குறித்து மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பேசப்படுவதாவது :-
தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் “க” எனும் எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண் எழுத்தருக்கும் “ஷீ ” எனும் எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட மற்றொரு பெண் எழுத்தருக்கும் ஏ1 பிரிவில் பணியாற்றும் “பா” எனும் எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட எழுத்தருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கும் அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோருக்கு முத்துக்குமார் என்ற கேஷ் குமார் அல்லக்கையாக உள்ளாராம். அதேபோல் வாகன ஆய்வாளர் கிரேடு 1 மற்றும் வாகன ஆய்வாளர் கிரேடு 2க்கு அல்லக்கையாக கனி என்பவரும் ஏ1 பிரிவில் பணியாற்றும் “பாய்’ என அழைக்கப்படுபவருக்கு அல்லக்கையாக சதீஷ் என்பவரும் மேற்படி அலுவலகத்தில் பட்டறையை போட்டு உள்ளனராம் .
பணம் வசூல் செய்யும் கவுண்டரில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் எவர் விண்ணப்பத்தை கொடுத்தாலும் விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக அவர்களிடம் கறாராக ரூ .10/- முதல் அதிக பட்சமாக ரூ.20/- வரை போட்டி போட்டுகொண்டு சிட்டையை போடுவார்களாம்.
இது தவிர வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு கொடிக்கு ரூ 50/- பணம் வசூல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில் கொடி எனும் பெயரில் குறைந்தபட்சம் ரூ100/- முதல் அதிகபட்சமாக ரூ500/- வலுக்கட்டாயமாக அவர்களிடம் வசூல் செய்கிறார்களாம் .
வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், வாகன வரி வசூலித்தல், வாகன பெர்மிட் புதுப்பித்தல், இறந்தவரின் வாகனத்தினை மற்றொருவர் பெயருக்கு மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ 250/- முதல் அதிக பட்சமாக ரூ 10000/- வரை லஞ்சப்பணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளதாம். இந்த லஞ்சப் பணத்தை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்களிடம் அங்கு பட்டறையை போட்டு உள்ள அல்லக்கை பேய்கள் வழி மறித்து பிடுங்குமாம் . மேலும் அல்லக்கை பேய்களை கவனிக்காமல் எவரும் மீறி சென்று அதிகாரிகளை சந்தித்தால் அவர்களுக்கு காரியம் கை கூடாதாம் . தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றுவோர் ஒரு நாளுக்கு
சர்வ சாதாரணமாக குறைந்தபட்சம் ரூ 3000 /- முதல் அதிகபட்சமாக ரூ 15000 /- வரை பதவிக்கேற்ப வசூல்வேட்டை நடத்தாமல் இருக்க மாட்டார்களாம் .
கடந்த 2015ம் ஆண்டு லாரி தொழிலதிபர் ஒருவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் நிதி கடன் பெற்று மூன்று லாரிகளை வாங்கி தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன உரிம பதிவு செய்தாராம். அப்போது அவரது மூன்று லாரிகளுக்கு வழங்கப்பட்ட வாகன உரிம பதிவில் அந்த லாரிகளுக்கு நிதி முதலீடு செய்த அந்த நிதி நிறுவனத்தின் பெயர் பதிவாகி இருந்ததாம் . மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அந்த லாரி உரிமையாளர் நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் தொகையை முழுமையாக செலுத்தாமல் நிலுவை தொகை வைத்து இருந்தாராம் .
இந்த சூழலில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலுள்ள முத்துக்குமார் என்ற கேஷ் குமார் என்ற அல்லக்கை கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த லாரி உரிமையாளரிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு அந்த நிதி நிறுவனத்திற்கு அவர் கடன் தொகையை முழுமையாக செலுத்தியதாக நிதி நிறுவனம் சான்று வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து அலுவலக ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து லாரிக்கு வழங்கப்பட்ட வாகன உரிம பதிவில் இருந்த நிதி நிறுவனத்தின் பெயர் பதிவை நீக்கி திருத்தம் செய்து விட்டனராம் .
இந்த முறைகேடு விவகாரத்தினை கண்டுபிடித்த அந்த நிதி நிறுவனம் இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாம். இதனால் தங்களது வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என பதறிய சில ஊழியர்கள் அந்த லாரி உரிமையாளர் அந்த நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு மேற்படியான முறைகேடு வெளியே தெரியாமல் கமுக்கமாக அமுக்கி விட்டார்களாம். இந்த விவகாரத்தில் அந்த நிதி நிறுவனத்திற்கு லாரி உரிமையாளர் செலுத்த வேண்டிய இரண்டு லாரிகளுக்கான கடன் தொகை முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதாம் . இன்னும் ஒரு லாரிக்கான கடன் தொகை செலுத்த வேண்டியுள்ளதாக தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகேயுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பேசப்படுகிறது
இந்த சூழலில் பொதுமக்கள் நிதி நிறுவனங்கள் மூலம் வாகன கடன் பெற்று அதனை நேர்மையாக நிதி நிறுவனத்தில் செலுத்திவிட்டு அந்த நிறுவனத்தில் கடன் தொகை முழுமையாக செலுத்தப்பட்டமைக்கு கடிதம் கொண்டு வாகன உரிம பதிவில் இருந்த நிதி நிறுவனத்தின் பெயர் பதிவை நீக்கி திருத்தம் செய்யக் கோரி வந்தால் அதனை அதிகாரிகள் முறைப்படி செய்து கொடுக்காமல் அவர்களிடம் கடன் தொகை முழுமையாக பெறப்பட்டமைக்கு நிதி நிறுவனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்ப சொல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பொதுமக்களை அதிகாரிகள் சுற்ற விடுகிறார்களாம் . வாகன கடன் தொகை பெற்றவர்கள் அதனை நிதி நிறுவனங்களில் முழுமையாக செலுத்தி விட்டமைக்கு கடிதம் பெற்று வந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அதனை ஆய்வு செய்து உறுதி படுத்தும் பணியை செய்ய வேண்டிய கடமைகொண்ட அதிகாரிகள் அதிகார போதையில் இருக்கையில் அமர்ந்து கொண்டு காட்டு தர்பார் நடத்துகின்றனராம் .
மதுரையிலுள்ள வடக்கு, மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றி வரும் பெரும்பாலான அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பள பணத்தை பெற்றுக்கொண்டு அதிகார போதையில் பதவியினை துஷ்பிரயோகம் செய்து வசூல் வேட்டை நடத்துவதில் கில்லாடிகள் என்ற பெயரோடு திகழ்ந்து வருகின்றனராம் .
அவர்களது முகத்திரையை கிழிக்கும் வகையில் மேற்படி அலுவலங்களில் நடைபெற்ற முறைகேடு சம்பவங்கள் குறித்து விரைவில் செய்தி வெளியிடப்படும் .
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் கட்டுப்பாட்டிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சட்டத்திற்கு விரோதமாக அதிகார போதை கொண்ட அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்த நியமித்துள்ள அல்லக்கை இலஞ்சப் பேய்களை அங்கிருந்து விரட்டியடித்து அவர்களின் கொட்டதை ஒடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடி அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .