Header Banner Advertisement

பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க…


Maintain silk sare as standard

print

1. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.

2. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

3. எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

4. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.

5. பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்

6. அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

7. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.