
குழந்தைகள் குடும்பம் குடித்தனம்
உணவு உறக்கம்
இப்படியான பொழுதுகளில்
ஒரு மதிய வேளையில்
அடுக்களை சாளரத்தின் வழியே
சிறகடித்து சிநேகமானாய்.
மனமொழியைப் புரிந்துகொண்ட
சிறு தலையசைப்பே
அயர்ச்சியையும் ஆயாசத்தையும்
போக்கும் ஔஷதமாய்..மாறிட
நித்தம் உன் வரவைத்தேடி..
இனம்புரியா பிரியத்துடன்…
பார்ப்போர் பரிகசிக்க..
காத்திருக்கிறேன் நான்..
புள்ளினமும் பெண்ணும்
பொருந்தா நட்பா என்ன?
COURTESY & SOURCE : – மதுரா –