Header Banner Advertisement

மருத்துவ குணம் நிறைந்த கமியாஸ் அல்லது பில்பிமி பழம் !


Medicinal Kamius fruit Phimmi

print

கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பிற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்கமாட்டோம். இது மிகவும் உன்னதமான ஆரோக்கிய நலன்களை கொண்ட பழமாகும். இதில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் ஆண்டிஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளது.

இது மிகவும் பிரபலமான பழம் இல்லையென்றாலும், இதன் பலன்களை அறிந்த சிலர் இதை மற்ற பழங்களை காட்டிலும், அதிகமாக சாப்பிட்டு வருகிறார்கள்.

கமியாஸ் அல்லது பில்பிமி பழத்தின் முக்கியமான சில பயன்களை பற்றி இப்போது காணலாம்.

இருமல்

இருமலில் இருந்து விடுபட சிறிதளவு பெருஞ்சீரகம், சிறிதளவு கமியாஸ் அல்லது பில்பிமி மற்றும் சக்கரை ஆகியவற்றை வேகவைத்த நீரை, காலையில் வெறும் வயிற்றில் பாதியையும் மாலையில் மீதியையும் குடிக்க வேண்டும்.

நீரிழிவு பிரச்சனை

நீரிழிவு பிரச்சனையில் இருந்து விடுபட, 6 கமியாஸ் அல்லது பில்பிமி பழங்களை தட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். இதனை கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.

முகப்பரு பிரச்சனை

கமியாஸ் அல்லது பில்பிமி பழங்களில் அமில பொருட்கள் அதிகமாக உள்ளது. இது முகப்பரு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெறுமனே பாதிக்கப்பட்ட தோல் மீது ஒரு நொறுக்கப்பட்ட பழங்களை வைத்து சில நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

நாக்கு அல்லது வாய் புண்

இந்த முறை சற்று வலியாக இருக்கும். ஆனால் மிகவும் பலன் தரக்கூடியது. இதில் உள்ள அமில தன்மை புண்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. சிறிதளவு நொருக்கப்பட்ட கமியாஸ் அல்லது பில்பிமி பழத்தை பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்தால் போதும்.

வாத நோய்

இந்த நோயினால் உண்டான வலிக்கு, சிறிதளவு கமியாஸ் அல்லது பில்பிமி பழத்தின் இழைகளை மிருதுவாக அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் 2-3 முறை தடவவும்.

பல் வலி

கமியாஸ் அல்லது பில்பிமி பழத்தை அரைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் உடனடியாக குணமாகும். வாய் புண்களுக்கும் ஏற்றது. கடைகளில் வாங்கும் மருந்துகளை விட சிறந்தது.