Header Banner Advertisement

ஆண்களுக்கு விட்டமின் டி அளவு குறைபாட்டால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு


Men vitamin D Child damage

print

தாயின் உணவுபழக்க முறை கர்ப்ப காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை தீர்மானிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் ஆண்களின் ஆரோக்கியமும் குழந்தையின் ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆய்வு

சமீபத்திய ஆய்வின் படி பெண்களின் ஆரோக்கியம் மட்டும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் தீர்மானிப்பது இல்லையாம். தந்தையின் வைட்டமின் டி உட்கொள்ளும் அளவிற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகிறது என ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.

தந்தையின் ஆரோக்கியமும் முக்கியம்

முந்தய கோட்பாடுகள், தாயின் வைட்டமின் டி நுகர்வு தான் குழந்தையின் தசை மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்திருந்தன. ஆனால் சமீபத்திய ஆராய்சிகளின் முடிவில் விஞ்ஞானிகள் தந்தையின் உணவு உட்கொள்ளலும் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.

வைட்டமின் டிஎதிலிருந்து கிடைக்கிறது?

வைட்டமின் டி என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து, இது சன்ஷைன் வைட்டமின் எனவும் அழைக்கப்படுகிறது. சூரியனின் அல்ட்ரா வயலட் கதிரானது நமது தோலுடன் தொடர்பு கொண்டு வைட்டமின் டி நமது உடலில் உருவாகிறது.

எலும்புகள் வலுவடைய

விட்டமின் டி உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக வைக்க விட்டமின் டி முக்கியம்.

வெயில்

விட்டமின் டி உங்களுக்கு கிடைக்க வாரத்தில் மூன்று முறையாவது காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள் அடிக்கும் வெயிலில் குறைந்தது 15 நிமிடமாவது இருக்க வேண்டும்.