Header Banner Advertisement

அம்மா…. என் அம்மா….


Mother My Mother

print

 

எத்தனையோ தவறுகள் செய்தும்

எதையும்  நினைவில் கொள்ளாதவள்

எத்தனயோ வலிகள் தந்தும்

எதையும் தாங்கிக் கொண்டவள்

எத்தனையோ அவளிடம் பெற்றும்

எதையும் கேட்டுப் பெறாதவள்

எத்தனை தொலைவில் வைத்தும்

எதையும் ஏற்றுக் கொண்டவள்

 

வலிகள் தாங்கி என்னை பெற்றும்

வலிகள் எனக்கு தராதவள்

தோள்களில் தூகிகி சுமந்தும் – என்

தோள்களில் சாய்ந்து கொள்ளாதவள்

என் நோய்களை தாங்கா மனத்தினள்

தன் நோய்களை தானே தாங்கியவள்

என் துயர் தாங்கா அன்னையவள்

தன் துயர் ஏதும் கொள்ளாதவள்

 

தேவை தெரிந்து செய்தவளின்

தேவை அறியாமல் இருந்திட்டேன்

வலிகள் அறிந்து போக்கியவளின்

வலிகளை போக்காமல் இருந்திட்டேன்

நோய்களை நீக்கி உதவியவளின்

நோய்களை உணராமல் உலவிட்டேன்

அன்பினை வாரி வழங்கியவருக்கு

அன்பு காட்டாமல் வாழ்ந்திட்டேன்

 

பெருந்தவம் செய்ததால்தான்

பிள்ளையாய் உனக்கே பிறந்திட்டேன்

அறிந்தே தவறுகள் செய்ததால்

அளவில்லா பாபமதை சேர்த்திட்டேன்

இருக்கும்போது உணராத உண்மையினை

இப்போது உணர்ந்தும் பயனில்லை

ஆண்டுகள் எத்தனை ஆனாலென்ன

அன்னையவளை நெஞ்சம் மறந்திடுமோ

அவள் காட்டிய அன்பினை

அனைவருக்கும் தந்தே மகிழ்ந்திருப்பேன்

அவள் பாதம் தினம் தொழுதே

ஆயுள்வரை வாழ்ந்திருப்பேன்

அன்னையின் ஆன்மா சாந்தியடைய

ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்

 

COURTESY & SOURCE : – பழனி – சென்னை – 87.