
நம்தபா வனவிலங்குப் பூங்கா கடல் மட்டத்துக்கு மேல் 4,500 மீட்டர் உயரம்வரை பரந்துள்ளது. 200 மீட்டர் உயரத்திலேயே செடி கொடிகள் நிறைந்து உயரமான மலையும் அதில் இருக்கும் அடர்ந்த காட்டையும் காவல் காப்பது போல தோன்றுகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், பனிச் சிறுத்தைகள் உள்ளிட்ட பலவகை விலங்குகள் உள்ளன. கஸ்தூரிமான், சாம்பார் உள்ளிட்ட மான்களும் இருக்கின்றன.
நம்தபா தேசியப் பூங்கா அஸாமில் உள்ள சங்லாங் மாவட்டத்தில் 1,800 சதுர கி.மீ. அளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் புலிகள் இருக்கிறது என்பது முக்கியமான செய்தி. அதிர்ஷ்டம் இருந்தால் அவற்றைப் பார்க்க முடியும். இந்த பூங்காவிலிருந்து மேல் ஏறிப்போனால் விஜயநகர் என்ற சிறு நகரத்தை அடையலாம். அதை அடைய ஏழு நாட்கள் ஆகும். லிசு இனத்தவர் வாழும் நகரம் அது. வழியில் சிறு மூங்கில் குடில்களில் மழைக்கு ஒதுங்கிக் கொள்ளலாம்.
நம்தபா பூங்காவுக்குச் செல்ல கவுஹாத்திக்கு போய் அங்கிருந்து மியோவுக்கு தின்சுக்யா வழியாக சென்று அங்கிருக்கும் சர்க்யூட் ஹவுஸில் தங்கி, அங்கிருந்து நம்தபாவுக்கு ஜீப் மூலம் செல்லலாம்.