
ஒரு கிரகத்துக்கு மற்றொரு கிரகம் 1,5,6,7,8,9 இவ்விடங்களில் இருந்தால் அது அதற்கு தற்கால சத்துரு கிரகம் எனப்படும்
ஒரு கிரகத்துக்கு தான் இருக்கும் வீட்டிலிருந்து 2,3,4,10,11,12 ஆம் வீட்டிலிருக்கும் கிரகங்கள் அக்கிரகத்துக்கு தற்கால மித்துரு ஆகும்
சிலர் – ஒரு கிரகத்தின் உச்ச வீட்டிலிருக்கும் கிரகங்கள் அக்கிரகத்துக்கு தற்கால மித்துரு என்கிறார்கள்
இந்த தற்கால பலத்தையும் நைசர்ச்கிக பலத்தையும் சேர்த்து கவனிக்கும் பட்சத்தில் கிரகங்களுக்கு
அதிமித்துரு
மித்துரு
சமம்
சத்துரு
அதிசத்துரு
என்று ஐந்து வித பலன் ஏற்படுகிறது
தற்கால பலத்தில் 2,3,4,10,11,12 ஆம் வீடுகள் தவிர மற்ற வீடுகளில் இருப்பவர்கள் தற்கால சத்துருவென்றரியவும்.
இதில் சமம் இல்லை என்று அறியவும்
1.நைசர்க்கிக பலம்ரீ தியாய்மித்துருவாயும் ——- தற்கால ரீதியாய்மித்துருவாயும் இருந்தால் -அதிமித்துரு
2.நைசர்க்கிக பலம்ரீ தியாய் சமமாயும் ——— தற்கால ரீதியாய் மித்துருவாயும் இருந்தால் – மித்துரு
3.நைசர்க்கிக பலம்ரீ தியாய்மித்துரு ———-தற்கால ரீதியாய்- சத்துருவாயும் இருந்தால் – சமம் .,
நைசர்க்கிக பலம்ரீ தியாய்சத்துரு ———– தற்கால ரீதியாய்
மித்திருவாயும் இருந்தால் சமம்
4 . நைசர்க்கிக பலம்ரீ தியாய்சமமாயும் ————தற்கால ரீதியாய் சத்துருவாயும் இருந்தால் -சத்துரு
,
5.நைசர்க்கிக பலம்ரீ தியாய்சத்துருவாயும் —— -தற்கால ரீதியாய் சத்துருவாயும் இருந்தால் -அதிசத்துரு ஆகும்