
சகோதர பிறப்பு இறப்பு எண்ணிக்கையின் இந்த ஆய்வு பொது பலனே ஆகும் !
எண்ணிக்கை :
மூன்றாம் அதிபதி வலிமை உடையவனாய் அவன்
பதினோராம் அதிபதிக்கு நண்பனுமாய் ,நண்பர்களுடன்
கூடியவனுமாய் பிதினோராம் இடத்தில் இருப்பானாகின்
அவனுடன் எத்தனை கிரகங்கள் இருக்கின்றனவோ
அத்தனை சகோதரர்களும் ஜாதகனுக்கு இருப்பார்கள் .,
பிறப்பு :
அஸ்வினி முதலாம் பாதத்திலிருந்து மூன்றாம் அதிபன்
நிற்கும் நட்சத்திர பாதம் வரையில் எண்ணி வந்த
தொகையோடு .,+
அஸ்வினி முதலாம் பாதத்திலிருந்து செவ்வாய் நிற்கும்
நட்சத்திர பாதம் வரையில் எண்ணி வந்த தொகையை
கூட்டி .,+
அப்படி கூட்டி வந்த எண்ணை அஸ்வினி முதலாம் பாதம்
தொடங்கி எண்ணி வரும் போது – எந்த நட்சத்திரத்தின்
எத்தனையாவது பாதம் வருகிறதோ .,
அந்த நட்சத்திர பாதத்தில் கோசார ரீதியாக குரு வரும்
வரும் போது ,ஜாதகனுக்கு சகோதரர்கள் பிறப்பார்கள் .,
இறப்பு எண்ணிக்கை :
கூட்டு எண்ணிக்கை தந்த நட்சத்திர பாதத்துக்கு உரிய
நவாம்ச ராசி யானது மேஷம் முதலாக எத்தனையாவது
ராசியாக வருகிறதோ அத்தனை சகோதரர்கள்
ஜாதகனுக்கு உண்டு .,
என்றும் ஆனால் அவற்றுள் எத்தனை ராசிகள்
பாபக்கிரகங்க்களின் வீடுகளாய் இருக்கின்றனவோ
அத்தனை சகோதரர்கள் இறந்து இருப்பார்கள்
அல்லது இறந்து விடுகிறார்கள் அல்லது இருக்காது எனலாம் .