Header Banner Advertisement

விதிமுறையை மீறிய ஒபாமா !


obama-rule-violations

print
மெரிக்க ஜனாதிபதிகளுக்கு ஒரு சிக்கலான கெடுபிடி உண்டு. பதவியில் இருக்கும் வரை அவர்கள் சொந்தமாக செல்போன் வைத்துக்கொள்ள கூடாது. அரசு கொடுக்கும் செல்போனைத்தான் பயன்படுத்த வேண்டும். அதிபர் பேசும் பேச்சு அனைத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் பதிவு செய்வார்கள். ஆனால், இந்த விதியை மீறி எப்போதும் செல்போனும் கையுமாக திரிபவர் அதிபர் ஒபாமா.
பில்கிளின்ட்டன், அமெரிக்க அதிபராக இருந்தபோது தனது சொந்த செல்போனில் இருந்து இரண்டு முறை மட்டுமே இ-மெயில் அனுப்பினார். புஷ் அதிபராக இருந்தபோது ஜனவரி 2011-ல் தனது சொந்த மொபைலில் இருந்து ஒரேயொரு மறை மட்டுமே இ-மெயில் அனுப்பினார். இவை எல்லாவற்றையும் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். செல்போனை பறிமுதல் செய்துவிட்டார்கள். “பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால் எனக்கான சொந்த வாழ்க்கை பறி போய்விட்டது.” என்று வருத்தத்தோடு பேட்டி கொடுத்தார், புஷ்.ஆனால், இந்த கெடுபிடியெல்லாம் ஒபாமாவிடம் பலிக்கவில்லை. ஒபாமா ஓர் இ-மெயில் அடிமை. கையில் செல்போன் இல்லாமல் அவரை பார்க்க முடியாது. அவருக்கு மிகவும் பிடித்தமான பிளாக்பெர்ரி மொபைலை அதிபர் மாளிகையில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “இன்னும் நான் எனது பிளாக்பெர்ரியை என்னுடன் வைத்திருக்கிறேன். பாதுகாப்பு அதிகாரிகள் என் பர்சனல் விஷயத்தில் தலையிட்டு என் செல்போனை பிடுங்கப் பார்க்கின்றனர். நான் அதை அனுமதிக்க மாட்டேன். பெர்சனல் மொபைல் வைத்திருப்பது உலகச்செய்திகளை நேரடியாக தெரிந்துகொள்ளவும் மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கிறது.” என்றார்.

அமெரிக்க நடிகை ஸ்கார்லெட்டுடன் மொபைலில் சாட் செய்வது ஒபாமா வழக்கம். ஒபாமாவுக்கு ‘மை ஸ்பேஸ்’ என்னும் சமூக வலைதளத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் மட்டும் 5 கோடி மக்கள் அவரது பக்கத்தை விரும்புகின்றனர். ஒருமுறை ஒபாமா விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கைதவறி அவரது செல்போன் கீழே விழுந்துவிட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் குனிந்து எடுக்கும் முன் சட்டென்று பாய்ந்து சென்று எடுத்தார். அந்தளவுக்கு செல்போன் மீது பைத்தியமாக இருந்தார் ஒபாமா.