
இங்கிலாந்தில் வில்ட்ஷையரில் ஒரு குறுகிய படகில் வாரக்கடைசியை நான் கழித்தேன். ஸ்டான்டன் செயின்ட் பர்னார்ட் என்ற ஆங்கிலக் கிராமமொன்றில் இந்தப் படகு ஒரு நதியில் கட்டாப்பட்டிருந்தது. பன்றி இறைச்சி, முட்டை, சிப்ஸ் ஆகியவற்றை காலை உணவாகச் சாப்பிட்டுவிட்டு, மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் நெருப்பின் அருகே அமர்ந்து இரவில் எனக்கு இடமளித்திருந்த மிட்ச், கிறிஸ்ட்டியுடன் கதை பேசிக்கொண்டிருந்தேன்.
இங்கிலாந்தில் நான் மேற்கொண்ட பயணத்தில் இந்த அரிய தருணத்துக்காக நான் செலவிட்டதெல்லாம் வழியில் ஒரு விவசாயிடம் குறைந்த விலையில் வாங்கிய ஒரு பெரிய பாட்டில் ஆப்பிள் ஜூஸ்தான்.
மிட்ச், கிறிஸ்டி ஆகிய இருவரையும் நான் இணையதளத்தின் வழியாக பிடித்தேன். அந்த தளத்தில் தங்குவதற்கு ஒரு எளிமையான ஒரு சோபாவை தர விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினராக இருப்பார்கள். 2004-ல் கேஸிபெண்டன் என்ற இளம் அமெரிக்க மென்பொறியாளாரால் இது உருவாக்கப்பட்டது. சிக்கனமான ஒரு துங்குமிடத்தைத் தேடி அவர் இதை உருவாக்கினார். தற்போது அதைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் புகைப்படங்கள், ஆர்வங்கள், பேசத் தெரிந்த மொழிகள், தங்குமிடங்கள் ஆகியவற்றைக் கொண்ட புரோபைல்களை அதில் வெளியிட்டுள்ளனர். தங்குவார்கள் பேரம் பேசிக்கொண்டு பாதுகாப்பான முறையில் செல்லும்போது தங்கிக்கொள்ளலாம்.
மிட்ச் மற்றும் கிறிஸ்டி இருவரும் சமீபத்தில் சரிசெய்யப்பட்டு ஒரு குறுகிய படகில் பின்புறமாக இருந்த படுக்கையைத் தந்தார்கள். எல்லா தரங்களிலும் இந்த சோபாக்கள் இருக்கின்றன. மிட்ச், கிறிஸ்டி இருவருக்கு உள்ளூரைப் பற்றி நன்கு தெரிந்திருந்த வழிகாட்டிகளைப் போலவும் இருந்தார்கள். அவர்கள் அதிர்ஷ்டத்துக்காக உள்ளூர் மக்கள் ரிப்பன்களை காட்டும் மரங்களுக்கும், பழங்கால மன்னர்கள் புதைக்கப்பட்ட மலை உச்சி கல்லறைகளுக்கும் அழைத்துச் சென்றார்கள். ‘வேல் ஆப் பியூசி’ என்ற இடத்தின் பகுதியையும் எனக்கு காண்பித்தார்கள். ஆவ்பரி கிராமமும், அதன் நியோலித்திக் கால கல் வளையங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
ஸ்டோன்ஹென்ஸைவிட பழமையான இவற்றின் வெளிப்புற வட்டம் குறுகலாக 335 மீட்டர்கள் விட்டம் கொண்டது. 3.6 – 4.2 மீட்டர் உயரம் கொண்ட கற்களால் செய்யப்பட்டது. இவை வானவியலோடு தொடர்புடையவை என்று கருதப்படுகிறது. ஆனால், இதை உள்ளூர்க்காரர்கள் புனிதமாக கருதுகிறார்கள்.
இந்த இடத்திற்கு அதிஷ்டவசமாக நான் அழைத்துச் செல்லப்பட்ட அன்று பகலும் இரவும் ஒரே நீளமாக இருக்கும் மார்ச் 21 ஆகும். அந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் கொடாடுவதற்காக அங்கு வந்திருந்தார்கள். வெண்ணிற அங்கிகளை அணிந்த பாதிரியார்கள் வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் இருந்தனர்.
சிறிய கல் வட்டங்களின் ஒன்றின் நடுவில் ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. செல்டிக் இனத்தவர்களின் பழங்கால திருமணச் சடங்கு அது. விருந்தினர்கள் கைகளைக் கோர்த்து நிற்கும் மணமக்களின் கரங்களில் ஒரு ரிப்பனைக் காட்டுவார்கள். நாங்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டோம். ‘லார்டு ஆப் த ரிங்ஸ்’ படத்திலிருந்து வந்தவர்போல தோன்றிய பாதிரியாரோடு உணவைப் பகிர்ந்து கொண்டோம்.
மிட்ச் அங்கிருந்த ஒரு மரத்தைக் காண்பித்து அதன் அடியில் எழுத்தாளர் டோல்கின் உட்காருவார் என்று கூறினார். ஒரு மண்டோலின் வாத்தியம் வந்தது. சில டிரம்களும் வந்தன. மனமக்களும் விருந்தினர்களும் ஆடத்தொடங்கினர்.
இந்தப் பயணத்துக்கு எனக்கு ஆன செலவு உள்ளூர் மதுக்கூடத்தில் குடித்த மதுதான். ஒரு கிணற்றின் மேல் இருந்த டேபிளில் நாங்கள் மூவரும் அமர்ந்தோம். அதனடியில் ஒரு பாதிரியாரின் உடல் இருப்பதாக பழங்கதை ஒன்று சொல்கிறது. மதுக்கூடத்தை மூடும் நேரம் ஆனபிறகு, அந்த பாதிரியாரின் ஆவி மதுக்கோப்பைகளை ஆடச்செய்யும் என்று மிட்ச் கூறினார்.
உலகம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிற சூழ்நிலையில் இணையதளம் சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க உதவி செய்வதாக எனக்குத் தோன்றியது. நீங்கள் எங்கு போகிறீர்கள் என்பதல்ல. எப்படி பயணம் செய்கிறீர்கள் என்பதே உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். அதேசமயம், பயணத்தின் முக்கிய அம்சமான புதிய மனிதர்களைச் சந்திப்பது மற்றும் புதிய கலாச்சாரத்தை அனுபவிப்பது ஆகியவையும் பூர்த்தியாகும்.
கட்டுரையாளர்: பீட்டர் மூர்