
மால்டோவா மிகவும் அழகான நாடு. அழகான மலைகள், செழிப்பான கிராமப்புறங்கள் கொண்டது. அதன் தலைநகர் சிசினாவ்கூட பார்ப்பதற்கு ஒரு பெரிய கிராமம்போல்தான் இருக்கும். மால்டோவா முந்தைய சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடு.
இன்னும் கூட அது தன்னுடைய சோவியத் காலத்தை மறக்காமல் இருக்கிறதே என்பதுதான், அங்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு தோன்றும் எண்ணம். எல்லாவற்றிலும் சோவியத் கால மந்தநிலை பிரதிபலிக்கிறது. கணக்கீடுகள் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சி குறைவாக உள்ள நாடு மால்டோவா என்பது உண்மையானது அல்ல.
இருந்தும் மால்டோவா மக்கள் இனிமையானவர். பயணிகளை வரவேற்பவர்கள். ஆனாலும், வெளிநாட்டுப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவது மிகக் குறைவு.
மால்டோவாவின் ஒயின் மிகவும் புகழ்பெற்றது. மக்கள் தங்கள் வீட்டின் பின்பகுதியில் ஒயின்களைத் தயாரிப்பார்கள். இப்படி வீட்டிலேயே ஒயின்களை தயாரிப்பவர்கள் ரஷ்யர்களோ, ருமேனியர்களோ அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். சோவியத் யூனியனிலிருந்தது பிரிந்து 18 ஆண்டுகள் கடந்து தங்களின் சுயகலாசாரத்தை மறுகண்டுபிடிப்பு செய்திருக்கிறார்கள்.
மால்டோவாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரே மாதிரியான தனிநபர் உள்ளது. ஆனால், அதில் இருக்கும் வித்தியாசம், இந்தியா வளரும் தேசம், பிராந்திய வல்லரசு. மால்டோவா பணக்கார நாடுகள் இருக்கும் ஐரோப்பாவில் ஓர் ஏழை நாடு. பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நாடு அது.
ஐரோப்பிய நாடுகளில் மிக குறைவான சுற்றுலாப்பயணிகள் வரும் நாடு இதுதான். ஐ.நா.வின் சமீபத்திய கணக்கெடுப்புப்படி மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் மால்டோவா 55-வது இடத்தில் இருக்கிறது.
மால்டோவில் சாகச விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லை. குதிரையேற்றம், பைக் சாகசம் செய்தல், மலையேறுதல், ஸ்கைடைவிங் என்று ஏராளமான சாகசங்கள் உள்ளன. இதுபோக இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நாடும் கூட.
வானிலை
ஐரோப்பிய கண்டம் முழுவதுமே குளிரும் பனிப்பொழிவும் உண்டு. அந்த வானிலை அப்படியே மால்டோவிலும் உண்டு. குளிர்காலத்தில் இது அதிகம். இலையுதிர்க்காலத்தில் குளிர் சற்று குறைவாகவும். கோடை காலத்தில் மிதமான வெப்பமும் நிலவுகிறது.
எங்கு அமைந்துள்ளது?
ஐரோப்பிய கண்டத்தில் உக்ரைனுக்கும் ருமேனியா நாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு.
எப்படிச் செல்வது?
லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் இருந்து பட்ஜெட் கட்டணத்தில் மால்டோவா நாட்டின் தலைநகரான சிசினாவுக்கு விமானப் போக்குவரத்து உண்டு. லண்டனில் இருந்து சிசினாவ் 2150 கி.மீ. தொலைவில் உள்ளது. 3 மணி 15 நிமிட விமான பயண நேரத்தில் சென்றடையலாம். விமானக் கட்டணம் ரூ.4,800-ல் இருந்து ஆரம்பமாகிறது. சாலைவழி போக்குவரத்தும் உண்டு. சாலை வழியாக 2590 கி.மீ. தொலைவில் உள்ளது.
எங்கு தங்குவது?
சிசினாவ் நகரில் உள்ள ஹோட்டல் காஸ்மாஸ் தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.2,800 கட்டணமாக பெறப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு
Tourism Agency of the Republic of Moldova
MD-2028, 53, Hincesti str.
Chisinau,
Republic of Moldova
Tel. (+373-22) 22 66 34
E-mail: info@moldovaholiday.travel