
ராமர் வனவாசம் சென்ற காலங்களில், சீதை ராவணனால் கடத்தப்பட்டப் பிறகு இந்த மலைப் பகுதியில் ராமர், லட்சுமணன் இருவரும் சீதையை தேடி அலைந்ததாக கூறப்படுகிறது. ராமரின் பாதம் பட்டதால் இந்த பகுதிக்கு ‘ராமக்கல்’ என்று பெயர் வந்ததற்கு பெயர்க் காரணமும் இருக்கிறது. ‘ராமரின் கல்’ என்ற பெயரே காலப்போக்கில் ராமக்கல் என்று மாறியது. இந்தப் பகுதி மலை மீது இருக்கும் சிறிய குன்று போல் காட்சியளிப்பதால் ராமக்கலுக்கு பின் மேடு என்று பெயரை சேர்த்துவிட்டனர். பெயர் எப்படி வந்திருந்தாலும் இதுவொரு அட்டகாசமான இடம் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.