
ஒரு ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தும் பலனளிக்காமல் போவதற்கு கீழ்கண்ட காரணங்களை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
1. தமிழ் வருடம், மாதம், திதி, நட்சத்திரம், ராசி, லக்னம் ஆகியவைகள் முடிகின்ற நேரத்திலும், பகல் இரவு சந்திப்பு காலத்திலும், நள்ளிரவு 12 மணி மற்றும் மத்தியான பொழுதிலும் பிறக்கின்ற குழந்தைகள் ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தாலும்கூட இவைகள் இரண்டும் கெட்டான் நேரத்தில் பிறந்த காரணத்தால் ராஜயோகம் பங்கம் ஏற்படுகிறது.
2. துவிதியை, சப்தமி, துவாதசி, திதியிலும், வியதீபாத யோகத்திலும் பிறந்ததால் ராஜயோகம் பயனளிக்காது. இடி விழுதல், பூகம்பம் முதலிய உத்பாதம் உண்டாகும் தினங்கள் பலன் இருக்காது
3. ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீச்சம் பெற்றால் பலந்தரா.
4. ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நீசம் பெற்றாலும் பலன் இல்லை.
5. 4,9,10,11க்குடையவர்கள் நீசம் பெற்றாலும் பலன் தராது.( அனுபவிக்க – 4 கூடிய பூர்வ புண்ணிய -9 பலன் கர்மாவினால் -10 பலனளிக்காது – 11 இடம் )
6. ராஜயோக கிரகங்கள் சூரியனிடம் அஸ்தமனம் பெற்றால் பலன் இல்லை.
7. லக்னமோ சந்திரனோ எந்த கிரகத்தாலும் பார்க்கப்பட விட்டாலும் பலன் இல்லை.