Header Banner Advertisement

சுந்தரவனம்: வங்கத்தின் பெருமை


Sundara pride Bengal forest

print
சுந்தரவனக் காடுகள் எப்போதுமே மர்மம் நிறைந்தவையாக இருப்பவை. வங்கப்புலிகள் வசிக்கும் இக்காடுகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய மையம் என்று அங்கீகாரம் பெற்றவை. புலிகள் மட்டுமல்லாமல், இந்தக் காடுகளில் பலவகை ஆமைகள், ராஜநாகம், மலைப்பாம்புகள், முதலைகள் ஆகியவை உள்ளன. சஜனகாலி பறவைகள் சரணாலயம் ஏராளமான பறவைச் செலவத்தைக் கொண்டதாக இருக்கிறது.
halidayisland

குறைந்த செலவில் ஒரு பயணத்தை மேற்கொள்ள சுந்தரவனக் காடுகள் பொருத்தமான இடம்தான். ஆனால் வெயிலைச் சமாளிக்க தயாராக இருக்கவேண்டும்.

கொல்கத்தாவிலிருந்து சுந்தரவனம் செல்ல 112 கி.மீ. பயணிக்க வேண்டும். கோத்காளி செல்ல காரிலும் செல்லலாம். இதைத்தாண்டி சாலை இல்லை. அங்கிருந்து படகில்தான் மேற்கொண்டு பயணிக்கவேண்டும். ரயிலில் வந்தால் கேனிங் என்ற இடத்துக்கு வந்த பிறகு, அங்கிருந்து சுந்தரவனம் செல்ல படகுகள்.

25648024

இங்கு ஆடம்பரமான மற்றும் சிக்கனமான விடுதிகள் உண்டு. ஏசி வசதி இல்லாத அறைகள், ஏசி அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஆற்றில் பயணம் செய்வது, இங்கு பரவசமூட்டும் அனுபவம். அதிகாலையில் ஆரம்பிக்கும் இப்பயணம் மாலை வரை நீடிக்கும் . ரூ.2,000 கட்டணம். வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய பயணம் இது.

இங்கிருக்கும் சுந்தரவனம் தேசிய பூங்கா 1,330 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. ஏழு நதிகள் இங்கு பாய்கின்றன. ஏராளமான வனவிலங்குகள், பறவைகளை தரிசிக்கலாம்.

வானிலை

சுந்தரவனக் காடுகள் வங்காள விரிகுடாவிற்கு அருகில் இருப்பதால் ஜூலை முதல் செப்டெம்பர் வரை அதிக மழைப்பொழிவை பெறுகிறது. மே மற்றும் எ அக்டோபர் மாதங்களில் இங்கு புயல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியசிலிருந்து 40 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கிறது.

இங்கு பயணம் செய்ய ஏற்ற காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை.

எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு விமானம் மூலம் பயணம் செய்து, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள சுந்தவனக் காடுகளை அடையலாம். அருகிலிருக்கும் ரயில் நிலையம் கேனிங். 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை வழியாக வருவதென்றால் பேருந்து மற்றும் டாக்சி வாடகைக்கு கிடைக்கிறது. கொல்கத்தாவிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

எங்கு தங்குவது?

சுந்தரவனக் காடுகளில் தங்குவதற்கு டென்ட் வகை முகாம்கள் இருக்கின்றன. தேசிய பூங்காவில் சுந்தரவன புலிகள் முகாம், சுந்தரவன முகாம்கள் உள்ளன. இதுபோக ஆடம்பரமான அறைகளும் வாடகைக்கு உள்ளன. இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.1,500-ல் இருந்து கட்டணம் பெறப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு

மேற்கு வங்காளம் சுற்றுலா மேம்பாட்டு கழகம்,

தொலைபேசி : +91 33 2210 3199, +91 33 2248 8271.

சுந்தரவன புலிகள் முகாம்

தொலைபேசி : +91 32 935749, +91 93 3109 2632.

Email : info@sunderbantigercamp.com