Header Banner Advertisement

தமிழகத்தின் கனவு நகரம்


tamil nadu State Dream City

print

இன்றும் கூட வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை ‘மதராசி’ என்றே அழைக்கின்றனர். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் நிரந்தரமாக பதிந்துவிட்ட பெயர் மதராஸ்.

தமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருக்கிறது. வங்காள விரிகுடாவில் இருக்கும் ஒரு கடற்கரை நகரம். மொத்தம் 178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது சென்னை நகரம். இந்நகரில் மொத்தம் 46,46,732 மக்கள் வசிக்கிறார்கள். ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 26,105 பேர் வாழ்கிறார்கள். ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் இருக்கிறார்கள். படித்தவர்கள் 90.18 சதவீதத்தினர் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 37,51,322 பேர் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 4,39,270 பேர் இருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் 3,58,662 இருக்கிறார்கள்.

சென்னை  வரலாறு கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து .ஆரம்பமாகிறது. பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசின் ஆட்சிகளில் சென்னைக்கென்று ஒரு தனி முக்கிய இடம்  இருந்தது.

சென்னை, தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் 1552-ல் போர்த்துக்கீசியர் முதன் முதலாக சென்னைக்கு வருகை தந்தனர். ஆனாலும் சென்னையில் தங்கி வாணிகம் தொடங்கியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர்தான் முதன் முதலாக வர்த்தகத்திற்கான உரிமையைப் பெற்றவர்.

விஜயநகர மன்னரின் உறவினரான வேங்கடப்பர் என்பவரிடமே சென்னை இருந்துவந்தது. அதை 1639-ல் பிரான்சிஸ்டே, கோகன் என்ற இருவரும் வாங்கி, 25 ஐரோப்பியர்களுடன் குடியேறினர். 1668-ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் எல்லையை விரிவுபடுத்தினர்.

முதல் மாநகராட்சி

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற அன்றைய கிராமங்கள் சென்னையுடன் சேர்க்கப்பட்டன. 29.09.1688-ல் சென்னை மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அனைத்திலும் முதன் முதலாக மாநகராட்சி என்ற தகுதியை பெட்ரா நகரம் சென்னைதான் என்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சம்.

சென்னையை ஆங்கிலேயர்கள்தான் ஆட்சி செய்தார்கள் என்றாலும் கூட இடையிடையே 1746, 1758, 1772 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை கைப்பற்றினார்கள். பின்னர் அவர்களிடம் இருந்து ஆங்கிலேயர் கைக்கு மாறியது.

பெயர்க் காரணம்

சென்னைக்கு 1996-க்கு முன்புவரை ‘மெட்ராஸ்’ என்ற பெயரும் இருந்தது. இரண்டு பெயருக்குமே போதிய காரணங்கள் கிடைக்கவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டிய வேங்கடப்பரின் தந்தை பெயரான சென்னப்பரின் பெயராலேயே, சென்னைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டதாக ஒரு கருத்துண்டு. ஆனால், மதராஸ்பட்டிணம் என்பதுதான் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்.

மதராஸ் என்ற பெயர் வந்ததற்கு பல கதைகள் கூறப்படுகின்றன. ‘மதரஸா’ என்பது உருது மொழியில் கல்லூரியைக் குறிக்கும். உருது மொழியைக் கற்றுக்கொடுக்கும் உருதுக் கல்லூரி ‘மதரஸா’ சென்னையில் இருந்ததால் அதைக் குறிக்கும் விதமாக மதராஸபட்டினம் என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

இன்னும் சிலர் அதெல்லாம் கிடையாது, மதரேசன் என்ற மீனவத் தலைவர் ஒருவர் இருந்தார். அன்றைக்கு மீனவர்கள்தான் சென்னையில் அதிகம் இருந்தனர். அவர்களின் தலைவராக இருந்த மதரேசன் பெயரைக் கொண்டே மதராஸ் என்பது வந்ததாக ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே மதராஸ் என்ற பெயர் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

போர்த்துக்கீசியர்கள் சென்னையை தங்கள் வசம் வைத்திருந்தபோது ஒரு மேரி ஆலயத்தை காட்டினர். அதற்கு ‘மேட்ரே-டி-டியஸ்’ என்று பெயர் வைத்தனர் என்றும் இந்த கஷ்டமான பெயர் நம் மக்கள் வாயில் நுழையாததால் மதராஸ் மற்றும் மெட்ராஸ் என்று சுலபமாக உச்சரிக்க தொடங்கினார்கள். என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.

‘மெட்ரோ’ என்ற போர்த்துக்கீசியர் குடும்பம் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக விளங்கியதால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது என்று ஒரு சிலரும், மதராஸ் என்பது ஒருவகையான கலிக்கோ துணி என்றும், அந்த துணித் தயாரிப்பில் அன்றைய சென்னை கொடிகட்டிப் பறந்ததால் மெட்ராஸ் என்ற பெயர் வந்ததாகவும் ஏகப்பட்ட காரணங்களை சொல்கிறார்கள். இவற்றில் எது உண்மை என்பது இன்றைக்கும் ஆய்வாளர்களை குழப்பும் ஒரு சமாச்சாரம்தான்.

பெருநகரம்

மெட்ராஸ் என்ற பெயரில் ஒரு மாகாணத்தை உருவாக்கி, அந்த மாகாணத்திற்கு சென்னையை தலைநகராக கொண்டு வந்தவர் வெல்லெஸ்லி. இவர் 1801-ல் இதை உருவாக்கினார். அதன் பிறகு இந்தியா விடுதலை பெற்று சென்னை மாகாணம் தமிழ்நாடாக மாறியபோது சென்னையே தமிழகத்தின் தலைநகராக நீடித்தது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரம் சென்னை. இது தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரையான மெரினா இதன் பெருமை. சாலை மற்றும் இருப்புப் பாதை மூலம் இந்தியா முழுவதும் இணைக்கப்பட்டிருக்கிறது. துறைமுகம், விமான நிலையம் மூலம் உலகம் முழுவதும் சென்னையுடன் இனைந்துள்ளது. பல மொழி பேசுபவர்களும், பல இனத்தவர்களும், அயல்நாட்டினரும் இனைந்து வாழும் பெரு நகரம்.

தொழில் நகரம்

சென்னை தொழில்துறையில் சிறந்து விளங்கும் ஒரு துறைமுக நகரம். இந்தியாவின் டெட்ராயிட் என்று சொல்லும் அளவுக்கு பல நாடுகளின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையை சுற்றிலும் அமைந்துள்ளன. இதுபோக ரயில்பெட்டி தொழிற்சாலை, சைக்கிள், மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், டயர் உற்பத்தி, இயந்திர தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கிண்டி, அம்பத்தூரில் தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை உள்ளது. டைடல்பார்க் சாஃப்ட்வெர் தொழிலின் மையமாக விளங்குகிறது.

சென்னையில் பெரிய பிரச்சனையாக இருப்பது குடிநீர் பிரச்சனைதான். 1782-ல் குடிநீர் வழங்கும் முறை தோன்றியது. அப்போது கோட்டையில் தனியாரிடம் இருந்த 10 கிணறுகளை விலைக்கு வாங்கியது. அதில் நீர் எடுப்பதாக இருந்தது. அது போதிய பலனளிக்கவில்லை. 1915-ல் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இன்றைய குடிநீர் வழங்கலுக்கு திட்டம் வகுத்தவர் மேட்லி என்ற மாநகராட்சி பொறியாளர்.

சென்னை மாநாகராட்சியே சென்னைக்கு குடிநீர் வழங்குவதையும், கழிவு நீர் அகற்றுவதையும் கவனித்து வந்தது. 1978-ல் உலக வங்கித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தொடங்கப்பட்டது. 1997-ல் கிருஷ்ணா நதி நீர், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனாலும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடு கொடுக்க முடியாமல் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியமும் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன.

கலை நகரம் 

சென்னை கலைகளுக்கு பெயர்பெற்ற ஊர். ஏராளமான கலைஞர்களை உருவாக்கிய ஊர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னைதான் தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணியில் இருந்த நகரம். இன்றைக்கும் ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களுக்கு அடுத்த படியாக பெரிய பட்ஜெட் படங்கள் வருவது தமிழில்தான். வசூலிலும் சாதனை படைக்கிறது.

பரதநாட்டியம் உலகமெங்கும் சென்றடைந்ததற்கு சென்னை ஒரு முக்கிய காரணம். ‘கூத்துப் பட்டறை’ மூலம் நடிப்பை பண்படுத்துவதிலும் தனித்து திகழ்கிறது. இப்படி கலைஞர்களை வாழ வைப்பதாலே பலரும் ஜிகினா கனவுகளுடன் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ரயிலேறுகிறார்கள். அதனால்தான் சென்னையை ஒரு கனவு நகரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பார்க்க வேண்டிய இடங்கள்

அமீர் மஹால்

பிர்லா பிளானெட்டெரியம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

கலாஷேத்ரா

நேப்பியர் பாலம்

ரிப்பன் பில்டிங்

ராஜாஜி ஹால்

செனட் ஹவுஸ்

டைடல் பார்க்

தியோலாஜிக்கல் சொசைட்டி

வள்ளுவர் கோட்டம்

விகடோரியா பப்ளிக் ஹால்

விவேகானந்தர் இல்லம்

கிண்டி தேசிய பூங்கா

EVP வேர்ல்டு – தீம் பார்க்

ஐஸ் ஸ்கேட்டிங்

அருங்காட்சியகங்கள் 

அரசு அருங்காட்சியகம்

தேசிய கலைக் கூடம்

குழந்தைகள் அருங்காட்சியகம்

மண்டல ரயில் அருங்காட்சியகம்

செம்மொழி பூங்கா

கடற்கரைகள் 

மெரினா

திருவான்மியூர் கடற்கரை

எலியாட்ஸ் கடற்கரை

நினைவிடங்கள் 

அம்பேத்கார் மணி மண்டபம்

அண்ணா சதுக்கம்

பகத்வத்சலம் நினைவிடம்

காந்தி மண்டபம்

காமராஜர் நினைவிடம்

எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்

பாரதியார் நினைவு இல்லம்

மொழிப்போர் தியாகிகள் மண்டபம்

காயிதேமில்லத் மண்டபம்

ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் மண்டபம்

பெரியார் நினைவிடம்

தியாகிகள் மணிமண்டபம்

ஆலயங்கள் 

அஷ்டலட்சுமி கோயில்

ஐயப்பன் கோயில் அண்ணாநகர்

கச்சாலீஸ்வரர் கோயில்

காளிகாம்பாள் கோயில்

கந்தக்கோட்டம் கந்தசாமி கோயில்

மத்தியகைலாஷ்

முண்டகண்ணி அம்மன்

பாம்பன் ஸ்வாமிகள்

பார்த்தசாரதி ஸ்வாமி கோயில்

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்

ஸ்ரீ நாராயணகுரு கோயில்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச நரசிம்ம பெருமாள் கோயில்

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்

ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் கோயில்

சாய் பாபா கோயில்

தியாகராஜஸ்வாமி கோயில் \

திருப்பதி தேவஸ்தானம்

திருவள்ளுவர் கோயில்

திருவல்லீஸ்வரர் கோயில்

கபாலீஸ்வரர் ஆலயம்

வடபழனி ஆண்டவர் கோயில்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கோயில்

தேவாலயங்கள் 

ஆண்டர்சன் தேவாலயம்

ஆர்மீனியன் தேவாலயம்

அவெல்லா தெரசா தேவாலயம்

சின்னமலை தேவாலயம்

ஹோலிகிராஸ் தேவாலயம்

சாந்தோம் பசிலிகா

செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம்

கிறிஸ்ட் தேவாலயம்

செவன்த்-டே தேவாலயம்

செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்

செயின்ட் மேரி தேவாலயம்

செயின்ட் ஆண்டனி தேவாலயம்

வேளாங்கண்ணி தேவாலயம்

மசூதிகள்

கிராண்ட் மசூதி

மஸ்ஜித் மமூர்

மெக்கா மஸ்ஜித்

ஆயிரம் விளக்கு மசூதி

தர்ஹாக்கள்

அண்ணா சாலை தர்ஹா

ஹஸ்ரத் பாபா தர்ஹா

மொஹம்மது இஸ்மாயில் சாஹிப் தர்ஹா

மோதி பாபா தர்ஹா

குவாத்ரி பாபா தர்ஹா

புத்தவிஹார் 

மகாபோதி சொசைட்டி

புத்த கோயில் இறையியற் சமூகம்

ஜெயின் ஆலயங்கள் 

பிரபு சாந்திநாத் ஜெயின் கோயில்

ஜெயின் குரு மந்திர்

ஸ்ரீ ஜெயின் பிராதன மந்திர்

ஸ்ரீ குஜராத்தி ஸ்வேதம்பேர் ஜெயின் மந்திர்

ஸ்ரீ விஜய சாந்தி ஸ்ரீ சுவாமிஜி குரு மந்திர

சுற்றுலாவுக்கு ஏற்ற காலம் 

சென்னைக்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரைதான். இந்தக் காலம்தான் கடுமையான வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இதமான தட்பவெப்பநிலையில் சுற்றிப்பார்க்க ஏற்றதாக இருக்கும்.

கோடைக்காலம் 

சென்னையின் கோடைக்காலம் மிகுந்த வெப்பம் கொண்டதாகவே இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் 45 டிகிரி செல்ஸியஸை தொடும். வியர்வையால் எங்கும் சுற்றிப் பார்ப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். அதனால் இந்த காலத்தில் சென்னை சுற்றுலாவை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம் 

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மழையில் நனைந்து திளைத்திருக்கும் காலம். கோடையின் வெப்பம் தணிந்து மழைப் பெய்யும் காலம். அன்றாட வாழ்வும் போக்குவரத்தும் அதிகமாக பாதிக்கப்படும். பயணம் கொஞ்சம் கடினமாகவே இருக்கும். அதனால் இந்தக் காலமும் சுற்றுலாவுக்கு உகந்ததல்ல.

குளிர் காலம் 

குளிர்காலம் என்பது நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. சென்னை இதமான குளிரை பெரும் நகரம். இந்த காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பமாக 19 டிகிரி செல்ஸியஸ் வரை குறையும். பகலிலும் மிதமான வெப்பமே நிலவும். காலை மற்றும் மாலை வேளைகளில் இதமான குளுமை நிலவுவதால் இதுவே சுற்றுலாவுக்கு ஏற்ற காலம்.

எப்படி செல்வது?

சென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதால் போக்குவரத்து வசதிகள் தாராளமாக இருக்கிறது. சாலைப் போக்குவரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருந்து கூட சென்னைக்குள் செல்ல சாலை வசதி உள்ளது. சென்னை மற்ற மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்களுடன் நான்கு வழிச்சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கு அரசுப் பேருந்துகளும், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோயம்பத்தூர், திருப்பூர் போன்ற இடங்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளும் தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், மும்பை போன்ற இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.