
மற்ற சில நாடுகளிலோ செங்கோல் ஏந்திய மன்னருக்குத்தான் சகல அதிகாரங்களும். உலகில் மிக முன்னேற்றமடைந்த கண்டமாக கருதப்படும் ஐரோப்பாவில் மட்டும் 10 நாடுகள் மன்னர்களின் கையில்தான் இருக்கின்றன. ஆசியா கண்டம் கூட கிட்டத்தட்ட அதேநிலையில்தான் இருக்கிறது. ஆசிய நாடுகளின் அதிபர்கள் சிலர் தங்களை சக்கரவர்த்தி, சுல்தான், அமீர் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
இன்றைக்கும் மன்னராட்சி உள்ள சில நாடுகள்; இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், நார்வே, பெல்ஜியம், ஸ்பெயின், லக்ஸம்பர்க், லீச்ட்ன்ஸ்டெயின், மொனாக்கோ, தாய்லாந்து, ஜப்பான், கம்போடியா, பூடான், புருனே, ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு குடியரசுகள், ஜோர்டான், மலேஷியா, மொராக்கோ, லெசோதோ, சுவாசிலாந்து, டோங்கா ஆகிய நாடுகள் உள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் 15 நாடுகளில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. எகிப்த், ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், ஈரான், எத்தியோப்பியா, கிரீஸ் போன்ற நாடுகள் அவற்றில் சில. இப்படியாக இன்னமும் மன்னராட்சியின் மிச்சங்களாக இந்த 28 நாடுகள் இருந்தன.