
காவிரியில் அதிகம் உரிமை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். காவிரி நதியின் பெரும்பகுதி தமிழ்நாட்டில்தான் ஓடுகிறது. இங்குதான் பாசனப் பரப்பும் அதிகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கர்நாடகா தனது பாசனப் பரப்பை அதிக அளவிற்கு பெருக்கி விட்டது. தண்ணீரை குறைவாக எடுத்துக்கொள்ளும் கேழ்வரகுதான் அவர்களின் பிரதான பயிராக இருந்தது. இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. இன்று கர்நாடகாவில் பார்க்குமிடமெல்லாம் நெற்பயிர்தான். அதனால்தான் அவர்களின் தண்ணீர் தேவை மிக அதிகமாகிவிட்டது. இந்த காரணத்தினாலேயே தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தர மறுக்கிறார்கள். அதற்கு ஒரு தீர்வாக இந்தக் காணொளி அமைந்திருக்கிறது.