Header Banner Advertisement

வனவிலங்குகளுடன் பயணம்


Traveling with wildlife

print

தென் ஆப்பிரிக்கா என்றாலே வனவிலங்குப் பயணங்கள் தான் நம் கவனத்தில் வந்து போகும். க்ரூகர் தேசியப் பூங்கா மிகப்பெரிய சரணாலயம். 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் 336 வகையான மரங்களும், 49 வகையான மீன்களும், 34 வகை நீர் நில வாழ்வனவும், 114 வகை ஊர்வனவும், 507 வகை பறவைகளும், 147 வகை பாலூட்டி விலங்குகளும் உள்ளன. 1898-ல் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம் அதன் பாரம்பரியத்தை இழக்காமல் இன்றைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கிறது.

big5-safaris-1g

வனவிலங்குகளுக்கு மிக அருகில் ஜீப் சஃபாரி செய்து பார்ப்பது இங்கு மட்டுமே சாத்தியம். சில வேளைகளில் நமது வாகனங்களில் மீது ஏறியும் கூட செல்லும். இந்த வகை சஃபாரிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காகவே 72 டூர் ஆபரேட்டர்கள் இங்கு இருக்கிறார்கள். நமது தேவைக்கு ஏற்ப 3 நாட்கள், 5 நாட்கள், 13 நாட்கள் என்று பலவிதமான பேக்கேஜ்களை வைத்திருக்கிறார்கள்.

இதுபோக கிளாஸிக் சஃபாரி டூர்ஸ், சஃபாரி ஹனிமூன், சஃபாரி லாட்ஜ், பிரீமியர் சஃபாரி கலெக் ஷன் என்று எல்லாவற்றிலும் வகைகள் இருக்கின்றன. கிளாஸிக் சஃபாரி டூரின் ஒரு பிரிவு வைல்ட் லைஃப் கல்ச்சர் என்பது. இதில் பாரம்பரிய வடிவைப்பில் உள்ள கோன்ஹா பழங்குடி மக்களின் குடிசை போன்ற விடுதிகளில் 3 நாட்கள் தங்கி விலங்குகளை பார்த்தல், இதில் யானையை உறுதியாக பார்க்க முடியும். ஏனென்றால் இந்த குடில் யானை போய் வரும் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

00588-5

வனவிலங்குகளை நடந்து சென்றே பார்ப்பது ஒரு வகை. ஜீப்பில் பார்ப்பது மற்றொரு வகை. விலங்குகள் அடிக்கடி இங்கு மனிதர்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் மனிதர்களுடன் ஒரு பந்தம் வளர்த்துக்கொண்டன. அதனால் மனிதர்களை அவைகள் தாக்குவதில்லை. தென் ஆப்பிரிக்காவில் அதுவும் க்ரூகர் தேசியப் பூங்காவில் சஃபாரி செய்வது மிக மிக இனிமையான  அனுபவம். சாகஸம்..!

அமைவிடம்

தென்  ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் ம்புமலங்கா மற்றும் லிம்போபோ மண்டலங்களில் அமைந்துள்ளது.

வானிலை

சீஸன் காலம் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கூட்டம் அதிகம் இருக்கும் காலம். இதமான சீதோஷணம் நிகழும் காலம், ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள்தான். ஆனாலும் விலங்குகளை பார்ப்பதற்கு வறண்ட காலமான மே முதல் செப்டம்பர் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற காலமாகும்.

நுழைவுக்கட்டணம் 

பெரியவர்கள் :   ரூ.1,470

குழந்தைகள்   :  ரூ.735 

(12 வயது வரை)

எப்படிச் செல்வது?

தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வது சுலபம். சென்னையிலிருந்து ஜோஹான்ஸ்பர்க்கிற்கு  நேரடி விமான சர்வீஸ்கள் உள்ளன. 13 மணி நேரப் பயணம். தொலைவு 7,101 கி.மீ. குறைந்தபட்ச விமான கட்டணம் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் ரூ.49,797. ஜோஹான்ஸ்பர்க்கில் இருந்து க்ரூகர் தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உண்டு. 420 கி.மீ. தொலைவை 5 மணி நேர பயணத்தில் சென்று சேரலாம்.

எங்கு தங்குவது?

க்ரூகர் தேசியப் பூங்காவில் உள்ள  ‘தி அவுட்போஸ்ட்’ தங்குவதற்கு ஏற்ற இடம் இருவர் இரண்டு இரவுகள் தங்குவதற்கு ரூ.15,892 கட்டணமாக பெறப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு 

South African Tourism,

95, Maker Chamber VI,

Nariman Point,

Mumbai – 400 021.

தொலைபேசி: +91 22 2285 0409

மின்னஞ்சல்: india@southafrica.net

இணையம்: www.southafrica.net