Header Banner Advertisement

விருதுநகர் மாவட்ட பிஆர்ஓக்களின் அராஜக அட்டகாசங்களுக்கு எதிராக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்கள் போர்க்கொடி!


Virudhunagar district pro news photo video graphers journalists fighting against Battle flag

print

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அருள்பதியின் அராஜக அட்டகாசங்களுக்கு எதிராக அந்த மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கட்டுப்பாட்டின்கீழ் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

VNR COLLECTOR

இந்த அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக அருள்பதி என்பவரும், உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக வெற்றிவேல் மற்றும் முத்துக்குமார் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

மேற்படி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் முக்கியப் பணியானது அந்த மாவட்டத்தில் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசாங்கத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தான நிகழ்ச்சிகளை அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் வாயிலாக அரசு சார்ந்த செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும்.

இதற்காக ஒவ்வொறு நிகழ்ச்சிக்கும் அழைத்து செல்லப்படும் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்களுக்கு தேனீர், உணவு மற்றும் அரசு வாகன எரிபொருள் செலவுகளுக்கு தமிழக அரசு பல ஆயிரம் ரூபாயை செலவிடுகிறது. மேலும் ஊடகத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு பேருந்து இலவசப் பயண அட்டை மற்றும் தீபாவளி போன்ற முக்கிய விழா நாட்களில் வெகுமதிகள் வழங்குவதற்காக பெரும் தொகையினை தமிழக அரசு ஒதுக்குகிறது.

ஆனால் அரசு ஒதுக்கும் தொகையினை செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அருள்பதி மற்றும் அவரின்கீழ் பணியாற்றும் சில ஊழியர்கள் கூட்டு சேர்ந்து மேற்படியான செலவுகளை செலவிடாமல் பல்வேறு முறைகேடுகள் செய்து சிட்டையை போட்டு கொள்ளையடித்து பங்கு போட்டு வாரி சுருட்டி கல்லா கட்டி வயிறு வளர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் அந்த மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்தும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு பெறும் அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வட்டம், சதுரம் உள்ளிட்ட எவரையும் அருள்பதி தலைமையிலான கூட்டு கொள்ளையர்கள் விட்டு வைக்காமல் அவர்களை வட்டமிட்டு ஊடகத்தில் செய்தி வெளியாக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்களை கவனிக்க வேண்டும் என திருவோடு ஏந்தாத குறையாக அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி அதனை வாரி சுருட்டி அதில் அந்த கும்பலுக்கு ஆதரவான சில முன்னணி ஊடகத் துறை ஊழியர்களுக்கு சொற்ப தொகையை வீசி எறிந்து பெரும் தொகையை அனைவரும் ஏப்பம் விட்டு விடுகிறார்களாம். மேலும் அருள்பதியை பொருத்த மட்டில் வசூல் வேட்டை நடைபெறும் இடங்களில் மட்டுமே அவரை காண முடியுமாம். பணி நேரத்தில் அவரை அலுவலக இருக்கையில் பார்ப்பதே மிக கடினமான காரியமாம்.

இது தவிர பத்திரிகைகளுக்கு விளம்பரம் ஒதுக்குவதற்கு மற்றும் அரசு பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கல், இடம் ஒதுக்குதல் என கமிஷன் பல்வேறு வழிகளில் கல்லா கட்டுவதில் அருள்பதி தலமையிலான கூட்டு கும்பல் கைதேர்ந்தவர்களாம்.

இது ஒருபுறம் இருக்க ஊடகத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்கள் அரசு பேருந்து இலவச பயண அட்டை பெற முறையாக விண்ணப்பத்தினை அருள்பதியிடம் வழங்கியபோதிலும் அவருக்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டுக்கு அதனை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு சிலரிடம் இலவச பயண அட்டைக்கு பரிந்துரைக்க கையூட்டு பெற்றுக்கொண்டு வழங்கியதாகவும், ஒரு சிலருக்கு இலவச பயண அட்டை வழங்க பரிந்துரை செய்யாமல் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதன் காரணமாக கோபம் அடைந்த ஊடகத் துறையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அருள்பதியின் மேற்படியான அராஜக அட்டகாசங்களை தட்டி கேட்டதாக தெரிகிறது .

அதனால் ஊடகத் துறையினர்மீது கோபம் கொண்ட அருள்பதி அவர்களை எப்படியும் ஒழித்து கட்டியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திட்டம் போட்டு வந்தாராம்.

1

இந்த நிலையில் தமிழக அரசாங்கம் சார்பில் கடந்த 14.01.2017 அன்று விருதுநகர் மாவட்டம் மருதநத்தம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவஞானம் தலைமயில் பொங்கல் சுற்றுலா விழா- 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தமிழக சுற்றுலா துறை சார்பில் நடத்த போகிறோம் என அதிகாரிகளால் ஒரு வாரத்திற்கு முன்னரே செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அருள்பதியிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதாம் .

2

இதனை சாதகமாக பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்களை அவர்கள் பணியாற்றும் ஊடக நிறுவனங்களில் கோர்த்து விட்டு அவர்களது வேலையை போட்டுத் தள்ளி ஒழித்துக் கட்ட நினைத்த அருள்பதி மேற்படியான நிகழ்ச்சி நடைபெறுவதை எவருக்கும் தெரிவிக்க கூடாது என அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு விட்டாராம் .

3 (1)

அதன் காரணமாக 14.01.2017 அன்று விருதுநகர் மாவட்டம் மருதநத்தம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் சுற்றுலா விழா- 2017 நிகழ்ச்சி குறித்த தகவல் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தெரியாமல் அனைவரும் நடைபெற்ற நிகழ்ச்சியை கோட்டைவிட்டு அவர்களது தலமை செய்தி ஆசிரியரின் கடுமையான எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திற்கு செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அருள்பதி தலைமையிலான கும்பல் தொடர்ந்து செய்து வரும் அராஜக அட்டகாசங்கள் அனைத்தும் தெரிந்து இருந்தபோதிலும் அதனை சிவஞானம் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்கள் கூறி புலம்பி வருகின்றனர் .

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகார இருக்கையில் அமர்ந்து கொண்டு பதவியை துஷ்பிரயோகம் செய்து கட்டு தர்பார் செய்து வசூல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சிட்டையை போட்டு கொள்ளையடித்து சுருட்டி கல்லா கட்டி வயிறு வளர்த்து வரும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அருள்பதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் அராஜக அட்டகாசங்களை ஒடுக்க விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படப் பதிவாளர்கள் சங்கத்தினர் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக பேசப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் அருள்பதி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்றதிற்கு பின்னர் அவரது சொந்த ஊரில் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில்லான வீட்டை கட்டியுள்ளதாக பரவலாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது .