Header Banner Advertisement

கெடா விருந்து வேண்டுமா….!


Want Dining out Kedah

print

மீல்ஸ், மினி மீல்ஸ், மைக்ரோ மீல்ஸ், நான்-வெஜ் மீல்ஸ், வெஜ் மீல்ஸ், மீன் சாப்பாடு, முட்டை சாப்பாடு….. இப்படியெல்லாம் கேள்வி பட்டு இருப்பீர்கள்……. ஆனா நான் சொல்லபோற இந்த சாப்பாடு……. அதுக்கும் மேல 🙂 !! இங்கு செல்வதற்கு முன் கிடைத்த தகவல்கள் எல்லாமே வியக்க வைத்தன, பொதுவாக ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட உட்கார்ந்தால் சோறு, மட்டன் சிக்கன் குழம்பு வகைகள், தொட்டு கொள்ள என்று நாம் இரண்டு அல்லது மூன்று வகையான கறி என்று சாப்பிட்டு இருப்போம், வெளியே வரும்போது அம்மாடி, நிறைய சாப்பிட்டோம் என்று நினைப்போம் இல்லையா….. ஆனால் இந்த UBM கெடா விருந்து சென்று திரும்பும்போது மட்டும் உங்களால் எவ்வளவு சாப்பிட முடியும் என்று டெஸ்ட் எடுத்து திரும்புவது போல, அவ்வளவு சாப்பிட்டு இருப்பீர்கள் !!

img_2428

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி சுமார் 25 கிலோமீட்டர் குன்னத்தூர் ரோட்டில் பயணம் செய்ய வரும் ஒரு ஊர் சீனாபுரம், அங்கு ரோட்டின் மேலேயே மரங்களுக்கு இடையில் சட்டென்று கடந்து போகும் இந்த UBM, பசியோடு இருக்கும் நேரத்தில் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு தேடவும் இல்லையென்றால் தாண்டி சென்று விடுவீர்கள் ! வாரத்தின் எல்லா நாட்களும் மதியம் 12 மணிக்கு இந்த “அதுக்கும் மேல” கெடா விருந்து கிடைக்கும், சுமார் மூன்றரை மணி வரை கிடைக்கும் இந்த விருந்துக்கும் ஒரு நாள் முன்னரே சொல்லிவிட வேண்டும், கும்பலாக சுமார் பத்து பேர் வரை இருந்தால் இன்னும் முன்னரே சொல்ல வேண்டி வரும் ! மரங்களுக்கு இடையில் இருப்பதால் சாப்பிடும் முன் சற்று நன்கு இளைப்பாறலாம், பின்னர் உள்ளே செல்ல வெள்ளை வேட்டி சட்டையில் கைகளை கூப்பி வீட்டிற்க்கு விருந்தாளியை வரவேற்ப்பது போன்று சிரித்த முகத்துடன் வரவேற்ப்பதுதான் இந்த UBM கெடா விருந்தின் ஓனர். உட்கார வைத்து சுமார் இரண்டு அல்லது இரண்டரை அடி வாழை இலையை உங்கள் முன் போடும்போது சின்ன இலையா கொடுங்க என்று மட்டும் சொல்லி விடாதீர்கள், விரைவில் அந்த இலை பற்றவில்லை என்று சொல்ல வேண்டி வரும்.

img_2444

அந்த இலையில் தண்ணீர் தெளித்து முடித்தவுடனே கை வலிக்கிறது, அவ்வளவு பெரிசு. நல்ல வெள்ளை நிறத்தில் சாதம் கொஞ்சமாக வைக்க, இன்னும் கொஞ்சம் என்று நாங்கள் கேட்க, இது சைடு டிஷ் மெயின் அயிட்டம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிகீங்க என்றார்….. நாங்கள் குழப்பத்துடன் பார்த்தோம். அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக இலையை நிரப்ப எங்களுக்கு இங்கு சாப்பிடாமலேயே வயிறு நிரம்ப ஆரம்பித்தது. ஒரு ஆட்டை காது, வாய், கால் என்று பார்த்திருக்கிறேன் ஆனால் இங்கு ரத்த பொரியல், குடல் குழம்பு, ஆட்டுக்கால் பாயா, மூளை பொரியல், மட்டன் சுக்கா என்று பல வகையில் முதலில் பார்த்தேன் ! அடுத்து நாட்டுக்கோழி, வான்கோழி, புறா என்று எல்லாம் இலையில் வந்தன……. மெதுவாக எங்களது வேட்டை ஆரம்பம் ஆனது ! உண்மையாகவே சாதம் என்பது தொட்டுக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க கூடாது என்று அன்பான கட்டளை வேறு ! பாதி சாப்பிடும்போதே அடுத்த அடுத்த அயிட்டம் வர ஆரம்பிக்க எங்களுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.

பொறுமையாக….. மிக பொறுமையாக சாப்பிடலாம் இங்கு, கேட்க்க கேட்க்க வருகிறது. அதுவும் கடைசியில் ரோஜா குல்கந்து போட்டு அதன் மேல் புளிக்காத தயிர் போட…… அட அட அட என்ன ருசி ! சாப்பிட்டு முடித்தவுடன் வெளியில் வரும்போது வெத்தலை பாக்கு, ஐஸ் கிரீம் பல பல வகைகளில் என்று இருந்தது. எல்லாம் சாப்பிட்டுவிட்டு அந்த மர நிழலில் ஒரு மலை பாம்பு போல படுத்து இருப்பது அவ்வளவு சுகம் !! பஞ்ச் லைன் : சுவை – ஒரு அசைவ உணவு அதுவும் இவ்வளவு வகையாக, ருசியாக வீட்டுக்கு விருந்து சென்றது போல உணர்வு வருகிறது ! நல்ல சுவை !!

அமைப்பு – ஒரு சிறிய தோப்பு வீடு, கார் வெளியே ரோட்டில் பார்க் செய்யலாம். போன் செய்துவிட்டு செல்லவும், இல்லையென்றால் சாப்பாடு கிடைக்காது.

பணம் – ஒரு சாப்பாட்டின் விலை 500 ரூபாய் !

சர்வீஸ் – அருமையான கவனிப்பு, ஒரு சொந்தக்காரரின் வீடிற்கு சென்று வந்த உணர்வு வரும்.

COURTESY & SOURCE : சுரேஷ்குமார்