Header Banner Advertisement

உடல் எடை குறைவதற்கான வழிகள்


Ways to lower body weight

print

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் தவிர்க்க வேண்டிவை

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது தான், உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதில் ஒரு சோகம் என்னவெனில், பல மாதங்களாக ஜங்க் உணவுகளை மறந்து, கடுமையாக உடற்பயிற்சியை செய்து, லிப்ட் கூட பயன்படுத்தாமல் எங்கும் மாடிப்படிகளைப் பயன்படுத்தியும், உடல் பருமனாவது தான்.

ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவரது அதிகாலை பழக்கவழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், அதுவே உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இங்கு உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் தவிர்க்க வேண்டிய சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அளவுக்கு அதிகமான தூக்கம்

ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 6-8 மணிநேர தூக்கம் போதுமானது. அளவுக்கு அதிகமான தூக்கம் உடல் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில், 10 மணிநேரத்திற்கும் அதிகமாக தூக்கத்தை மேற்கொள்பவர்களின் உடல் எடை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. ஆச்சரியமாக உள்ளது தானே? எனவே அளவாக தூங்கி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.

படுக்கையை சரிசெய்யாமல் இருப்பது
அமெரிக்க தேசிய உறக்க நிதி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், காலையில் எழுந்ததும் யார் படுக்கையை சரிசெய்கிறார்களோ, அவர்கள் நல்ல தூக்கத்தை பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றால், அது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவும்.

காலையில் எடை பார்க்கும் பழக்கம் இல்லாதது
ஒருவர் தனது உடல் எடையை சோதிக்க சிறந்த நேரம் காலை நேரைம் தான். காலையில் உணவு அல்லது எந்த ஒரு பானமும் பருகுவதற்கு முன், உடல் எடையைப் பார்த்தால், உங்களது சரியான உடல் எடை தெரியும். எனவே காலையில் எடையைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டு, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

அளவான காலை உணவை உண்பது

அதிகாலை உணவு என்பது 600 கலோரிகளுடன், கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதற்கு குறைவான அளவில் காலை உணவை உட்கொண்டால், அது நாள் முழுவதும் பசியுடன் இருக்க செய்து, கண்ட உணவுகளின் மீது நாட்டத்தை அதிகரிக்கும். எனவே எடையைக் குறைக்க காலை உணவை அளவாக சாப்பிடாமல், நன்கு வயிறு நிறைய சாப்பிடுங்கள்.

இருட்டான அறையில் தயாராவது

பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வில், அதிகாலை சூரியனிலிருந்து வெளிவரும் நீல நிற கதிர்கள் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்தாலும், உடல் நிறை குறியீட்டெண்ணைப்( BMI) பாதிப்பது தெரிய வந்துள்ளது.