
இங்கே எல்லோருக்கும்..எல்லோரையும் பிடிப்பதுமில்லை..
எல்லோரையும் நேசிப்பதுமில்லை.. சிலருக்கு காரணங்கள் இருக்கும்…
சிலருக்கு காரணமேயில்லாமல்.. ஆனால் ஒன்று பாருங்கள்..
எந்த ஒருவரை பிடிக்கவில்லையோ..எந்த ஒரு விஷயம் பிடிக்கவேயில்லையோ..
அதனைபற்றித்தான் அதிகம் யோசிப்போம்… அதிகம் பேசுவோம்…
சிலருக்கு சிறிது காலம் பிடிக்கும்…மறக்க…மாற்றிக்கொள்ள.. சிலர் அதனை விடுவதேயில்லை…
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.. பேசி பேசி.. புதுப்பித்துகொண்டேயிருப்பர்…
எந்த ஒன்று பிடிக்கவேயில்லையோ…
அதனைபற்றி ஒருமுறைக்கு..பலமுறை நிதானமாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்து… மன்னிப்பிற்கு அங்கே இடமேயில்லை வாய்ப்பேயில்லை என்றானபின்…
அதனை ஏன் மூட்டைபோல் சுமந்துகொண்டே திரியவேண்டும்.. பாரமாயில்லையா…. அதனைபற்றி பேசுவதுகூட அபத்தம்…
வேண்டாம் என்று உள்மனம் தீர்க்கமாக முடிவெடுத்தால் மறந்தேவிடுவோம்… உருவமோ.. காரணகாரியங்களோ… நினைவிலேயே நிற்காது….
அப்படி மறக்கவே இயலவில்லை என்றால்.. தீர்க்கமாக முடிவெடுக்கவில்லை… நிதானமாக முழுவதுமாக ஆராயவில்லை.. இன்னும் அங்கே வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்…
அப்படியிருக்க… வெளியே வெறுப்பதுபோல் பிதற்றிகொண்டேயிருப்பது மிக மிக அபத்தமாயிற்றே.. கேட்போருக்கும் அலுப்பாயிருக்கும்… உங்களைபற்றிய மதிப்பீடு குறையும்…
நான்தான் கிடைச்சனா என்று உள்ளக்குள் ஆத்திரபடுவர்… வெளியில் காட்டிகொள்ளாவிட்டாலும் மனவோட்டம் இந்த ரீதியில்தான் இருக்கும்…
நமது சிந்தனை… நமது எண்ணங்கள் நமது உரிமைதான்… இதில் பிறத்தியார் என்ன பாவம் செய்தார்கள்..உங்களோடு சேர்ந்து உங்களுக்கு மூட் வரும்போதெல்லாம் ஒப்பாரி வைக்க அவர்களது நிலை..உணர்ச்சிகள் வேறாக இருக்கலாமல்லவா..
நமக்கு யாரும் செவி கொடுக்கவில்லையென்றாலும் ஆத்திரபடுவோம்… அங்கே பிரச்சனையும் வாய்வார்த்தைகளும் அதிகரிக்கும்…
நம்மை மாற்றிகொள்வது ஒருபுறமாக இருந்தாலும்… மற்றவரை தொந்தரவுபடுத்தாமல் அவர்களது நிலை மனம் உணர்ந்து செயல்படுவது.. உறவுகளை காப்பாற்ற உதவும்..அது உற்ற நேரத்தில் உதவுவதோடு… பிறர்மத்தியில் நம்மீதான மதிப்பு கெடாமல் இருக்க உதவும்…
உறவுகளும் பலப்படும்
புரிந்து செயல்படுவோம்….